பிரசவ வலியால் துடித்ததையும், குழந்தையை முதன் முதலில் கையில் வாங்கிய தருணத்தையும் பகிர்ந்த சன் டிவி சீரியல் நடிகை.

0
983
anu
- Advertisement -

திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தன்னுடைய முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல் என்றாலே முதலில் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சன் தொலைக்காட்சி தான்.

-விளம்பரம்-

அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளும் புதுபுது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இது முழுக்க முழுக்க குடும்ப, காதல், நகைச்சுவை நாடகம் ஆகும். இந்த தொடர் மதியம் தான் ஒளிபரப்பாகி வருகிறது.

- Advertisement -

பாண்டவர் இல்லம் தொடர் பற்றிய தகவல்:

இந்த தொடரில் பாப்ரிகோஷ், நரேஷ் ஈஸ்வர், ஆர்த்தி சுபாஷ், குகன் சண்முகம் உட்பட பலர் நடிக்கிறார்கள். அண்ணன்- தம்பிகள் இடையேயான உறவு குறித்த தொடர். அதுமட்டும் இல்லாமல் பாண்டவர் இல்லத்தை ஐந்து மருமகள்களும் எப்படி பொறுப்புடன் வழிநடத்துகிறார்கள்? பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் சீரியலின் கதை. தற்போது பல திருப்பங்களுடன் தொடர் சென்று கொண்டிருக்கின்றது. இதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

அனு குறித்த தகவல்:

மேலும், இந்த சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் நடிக்க அறிமுகம் ஆகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மெல்ல திறந்தது கதவு என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார். அப்படியே இவர் சன், விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அனு குடும்பம்:

மேலும், சின்னத்திரை சீரியலின் மூலம் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருந்தார். தற்போது இவர் பாண்டவர் இல்லம் சீரியலில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். இதனிடையே இவர் விக்னேஷ் என்ற விக்கி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அணு சீரியலில் நடித்து வருகிறார்.

ஆண் குழந்தை :

இப்படி ஒரு நிலையில் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் கழித்து அனு கர்ப்பமாக இருப்பதாக இருப்பதை அறிவித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு நிலையில் பிரசவ அறையில் அனு வலியால் துடித்ததையும் தனது மகனை முதன் முதலில் கையில் வாங்கியதையும் வீடியோவாக வெளியிட்டுள்ளனர் அனு மற்றும் அவரது கணவர்.

Advertisement