ராஜுயால் அவமானப்பட்டு நிற்கும் அவர் அம்மா, கோபத்தில் கொந்தளிக்கும் கோமதி- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
251
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், தன் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில், வந்ததிலிருந்து பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக சொல்ல இருந்தார். ஆனால், மீனா- ராஜு இருவரும் போக மறுத்து விட்டார்கள். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்தார்.

-விளம்பரம்-

அப்போது, ஆன்லைன் மூலம் புக்கிங் செய்வதை சரியாக கவனிக்காமல் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். அந்த சமயம் பார்த்து அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 21000 கட்ட வேண்டும் என்று மெசேஜ் வந்ததை பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் சொன்னார். ஆனால், அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். கடந்த வாரம், மீனா அப்பா, அம்மாவிடம் செந்தில் சண்டை போட, அதற்கு அவர்களும் கோபமாக பேசி இருந்தார்கள். இறுதியில் மீனா அப்பாவிடம் செந்தில் சவால் விட்டார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை கதிர், போனில் ரெக்கார்டு செய்து மீனாவிடம் காண்பிக்க அதை பார்த்தவுடன் ஆனந்தத்தில் மீனா அழுதார். அடுத்த நாள் தங்கமயில்-சரவணன் ஹனிமூன் சென்று இருந்தார்கள். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம்மின் மொத்த செலவு 26000 என்று தெரிந்து அதிர்ச்சியாகி இருந்தார். இதை சரவணன், கதிரிடம் சொல்லி இருந்தார். பின் இந்த விஷயம் செந்திலுக்கு தெரிய வந்து மீனாவிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.

சீரியல் கதை :

கடைசியில் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்து பணத்தை எடுத்து விட்டார்.
அதோடு கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து இருந்தார். சரவணன் நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்த போது கதிர் பணம் அனுப்பியதை பார்த்து சந்தோஷப்பட்டார். நேற்று எபிசோடில், கோமதியின் அம்மா வீட்டில் அவருடைய சின்ன அண்ணன் மகனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. பின் பெரிய அண்ணன், சின்னத் தம்பியை அழைக்கிறார். ஆனால், இது அவருடைய பெரிய தம்பிக்கு பிடிக்கவில்லை.

-விளம்பரம்-

நேற்று எபிசோட் :

இன்னொரு பக்கம் ராஜி டியூஷன் எடுக்கும் இடத்திற்கு கதிர் சாப்பாடு டெலிவரி செய்ய போனார். இதை பார்த்து ராஜி ஒளிந்து கொண்டு ஒருவழியாக தப்பித்து விடுகிறார். ஹனிமுன் கொண்டாட்டத்தில் சரவணன்- தங்கமயில் சந்தோசமாக இருக்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோமதி அண்ணன் மகனை பார்க்க பெண் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்கள். அப்போது எல்லோர் கழுத்திலும் நகைகள் நிறைய இருக்கிறது. ஆனால், ராஜி அம்மா கழுத்தில் மட்டும் நகை இல்லை. இதை அவருடைய அப்பா கவனித்து அமைதியாக இருக்கிறார்.

இன்றைய எபிசோட் :

பெண் வீட்டில் சென்ற பிறகு, எங்கே உன் நகை என்று கேட்டதற்கு, என் அம்மா வீட்டில் கொஞ்சம் பிரச்சனை அதனால் கொடுத்திருக்கிறேன் என்று ராஜி அம்மா சொல்ல, கோபமடைந்த அவருடைய அப்பா அடித்து விடுகிறார். அதற்குப் பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி ராஜி அம்மாவை வெளியில் தள்ளி விடுகிறார். அதை பார்த்த கோமதி, அவருடைய அண்ணன்கள் இடம் சண்டை போடுகிறார். பின் அப்பத்தா, திருமணம் நடக்கும் நேரத்தில் இந்த மாதிரி எல்லாம் தேவையில்லாத வேலைகள் செய்ய வேண்டாம் என்று ராஜி அம்மாவை கூப்பிட்டு கொண்டு வந்து விடுகிறார். இதையெல்லாம் பார்த்து ராஜி, விஷயம் என்னவென்று தெரியாமல் வருத்தப்பட்டு அழுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement