விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வடிவு, நகை பற்றி மறைத்து வைத்த விஷயம் ராஜி அப்பாவிற்கு தெரிந்து பயங்கரமாக இருவருக்கும் இடையே சண்டை நடந்தது. இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து தன் அண்ணனிடம் சொல்லி இருந்தார். ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டைக்கு போனார்கள். அப்போது ராஜி செய்த வேலை தெரிந்து மொத்த பாண்டியன் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து நின்று இருந்தார்கள்.
பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்க, பாண்டியன் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார். உடனே கதிருக்கு கோபம் வந்து ராஜியிடம் கத்துகிறார். கடைசியில் எல்லா உண்மையும் மீனா உளற பாண்டியனுக்கு கோபம் அதிகமாகி திட்டி இருந்தார். மொத்த குடும்பமே மீனா- ராஜிக்கு எதிராக நின்றது. அதன் பின் கோமதியிடம் மன்னிப்பு கேட்க ராஜி, மீனா இருவருமே சமையல் கட்டுக்கு போனார்கள். ஆனால், கோமதி முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் செந்தில், பாண்டியன்,கதிர் பேசி கொண்டிருந்த போது, கதிர் மன்னிப்பு கேட்டார். இந்த வாரம் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிடும் போது, மீனா- ராஜி வந்தவுடன் பாண்டியன் கிளம்பி விட்டார். உடனே கோமதி, நீங்கள் பண்ணியதை மறக்க மாட்டேன்,மன்னிக்க மாட்டேன் என்று திட்டுகிறார்.
அதோடு இந்த விவகாரம் எல்லாம் சரவணன்-தங்கமயிலுக்கு தெரிந்து விட்டது. இன்னொரு பக்கம் ராஜி- கதிர், செந்தில்-மீனா இடையே பயங்கரமாக சண்டை நடந்தது. பாண்டியன், நடந்ததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு பேச, கோமதி எவ்வளவு ஆறுதல் சொல்லியும் பாண்டியனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சீரியல் கதை:
மறுநாள் கோமதிக்கு உதவ மீனா- ராஜி இருவரும் போனார்கள். இருந்தாலும், கோமதி அவர்களை மன்னிக்கவே இல்லை. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு சரவணன்- தங்கமயில் வந்தவுடன் நடந்த சண்டையை பற்றி தான் பேசி இருந்தார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று தங்கமயில், மீனா- ராஜுவை பயங்கரமாக குறை சொல்லி இருந்தார். நேற்று எபிசோடில், ராஜி அப்பா சண்டே போட்டதை பற்றி சரவணன் வீட்டில் பேசிக்கொண்டிருக்க, கதிர்- செந்தில் சமாதானம் செய்தார்கள். அதற்கு பின் 21,000 பணம் பற்றி கேட்க இருவருமே, பார்த்துக் கொள்ளலாம் என்று சமாளித்து விடுகிறார்கள்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் நகையை பேங்கில் இருந்து எடுக்க கோமதி, தங்கமயில் போனார்கள். வீட்டில் ராஜி-மீனா இருவருமே நடந்ததை பற்றி ரொம்பவே வருத்தப்பட்டு பேசி இருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், பேங்கில் இருந்து மொத்த நகையும் வீட்டுக்கு கோமதி எடுத்துக் கொண்டு வந்து விடுகிறார். பின் அவரவர்கள் நகையை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் இங்கு வந்து மீண்டும் சண்டை போட வேண்டாம் என்று ஜாடை மாடையாக மீனாவை வம்பு இழுக்கிறார். மீனாவும் தன்னுடைய மாமியாரை எவ்வளவோ சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், அவர் சமாதானமே ஆகவில்லை.
இன்றைய எபிசோட்:
அப்போது தங்கமயில், தன்னுடைய நகைகளை எடுத்து பார்க்கிறார். நகைகள் எல்லாம் பார்க்க கருகிப் போய் இருப்பது தெரிகிறது. அரசி கேட்டும் தங்கமயில் யாருக்கும் தெரியாமல் மறைக்கிறார். பின் ராஜியின் மொத்த நகையையும் சித்தப்பு கொண்டு போய் அவருடைய அண்ணன்கள் இடம் கொடுக்க, அவர்கள் எதுவும் பேசாமல் வாங்கிக் கொள்கிறார்கள். அதற்கு பின் இந்த நகை விஷயத்தையும், ராஜி டியூஷன் எடுக்கும் விஷயத்தையும், பாண்டியன் பக்கம் இருக்கும் நியாயத்தையும் கூறுகிறார். ஆனால், அவர்கள் கேட்டுக் கொள்ளாமல் வழக்கம்போல் பாண்டியனை திட்டுகிறார்கள். அத்துடன் சீரியல் முடிகிறது.