கோபத்தில் ஹாஸ்பிடலுக்கு போகும் கோமதி அண்ணன்கள், பாண்டியன் என்ன செய்தார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
169
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கடந்த வாரம் ராஜியின் அம்மா வீட்டில் நடந்த சண்டையில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் ராஜி- கோமதி இருவருமே குழப்பத்தில் புலம்பி கொண்டிருந்தார்கள். அந்த சமயம் பார்த்து வந்த கதிர் எல்லா உண்மையும் சொல்ல இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். ஆனால், உண்மையில் பாட்டிக்கு ஒன்றுமே ஆகவில்லை. தன்னுடைய அம்மாவின் நிலைமையை நினைத்து கோமதி அழுது புலம்பி இருந்ததை பார்த்து பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொன்னார்.

-விளம்பரம்-

பின் அப்பத்தா, தனக்கு ஒன்னும் இல்லை என்ற உண்மையை மருமகள்களிடம் சொல்ல, அவர்களும் டிராமாவிற்கு ஒத்துக் கொண்டு நடிக்கிறார்கள். பின் பழனி, தன் அம்மா நன்றாக இருக்கும் விஷயத்தை சொன்னவுடன் கோமதி ஆறுதல் அடைந்தார். மேலும், கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்த சாப்பாட்டை பழனியிடம் கொடுக்கும்போது பாண்டியன் வாங்கி பார்த்து விட்டார். வேறு வழியில்லாமல் கோமதி உண்மையை சொல்ல, பாண்டியன் எதுவும் சொல்லாமல் கொடுத்து விடு என்கிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் பழனி, உன் மகள் செய்த சாப்பாடு என்று சொன்னவுடன் அவரும் சந்தோஷத்தில் சாப்பிட்டு தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார். அதை வீடியோவாக எடுத்து கோமதி இடம் பழனி காண்பித்தார். அதை பார்த்து கோமதி ரொம்ப சந்தோஷப்பட்டு அழுதார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல, மகன்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள். பின் ராஜி வீட்டில் இருந்து யாருமே ஹாஸ்பிடலுக்கு வரக்கூடாது. அதற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று பழனி இடம் வேலையை ஒப்படைத்தார்கள்.

நேற்று எபிசோட்:

அவரும் வீட்டிற்கு சென்று தன் அண்ணன்களிடம் பேச்சிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அப்போது சக்திக்கு பெண் பார்ப்பதாக சொல்லி தன் அண்ணன்களை எங்கும் போக விடாமல் பழனி தடுத்து நிறுத்தி இருந்தார். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. அவர் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். நேற்று எபிசோட்டில் கோமதி, தன்னுடைய அம்மாவிடம் மனம் விட்டு பேசி இருந்தார். ஆனால், தன் அம்மா பேசாத கவலையில் ராஜூ இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

கோமதி பேச சொல்லியும் வடிவு பேச மறுத்து விட்டார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த பாண்டியன், எங்கே கோமதி என்று கேட்க? தங்கமயில்- மீனா ஏதேதோ காரணத்தை சொன்னார்கள். இன்னொரு பக்கம் பெண் வீட்டார் வருவார்கள் என்று பழனியின் அண்ணன்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜு, எவ்வளவோ கெஞ்சி கதறி அழுதும் அவருடைய அம்மா ஏற்றுக்கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள் ரொம்பவே கோபப்பட்டு இருக்கிறார்கள். கடைசியில் அவர்கள் ஹாஸ்பிடலுக்கு கிளம்ப பார்த்தார்கள்.

சீரியல் ட்ராக்:

உடனே பழனி, கதிரிடம் இந்த உண்மையை சொல்ல, கதிரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பின் வீட்டிற்கு வந்த கோமதி, தன் அம்மாவிற்காக கோவிலுக்கு போனதாக சொல்ல பாண்டியனும் எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார். பின் தன் கதிர் செய்த வேலையை நினைத்து கோமதி பெருமையாகவும், சந்தோஷப்பட்டும் பேச, இதற்கெல்லாம் மற்றவர்களும் தான் உதவி செய்தார்கள் என்று மீனா சொன்னார். உடனே கோமதி, மூன்று மகன்களையும் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். ஆனால், தன்னுடைய அம்மா எதுவுமே பேசவில்லை என்று ராஜி சொன்னதை கேட்டு மீனா அவருக்கு ஆறுதல் சொல்லியிருந்தார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement