தயவு செய்து இப்படி பண்ணாதீங்க – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குறித்து ஹேமா ஆதங்கம்

0
449
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 குறித்து நடிகை ஹேமா பதிவிட்டு இருக்கும் போஸ்ட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், தீபிகா என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று இருந்து இருக்கிறது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிறைவடையும் முன்னரே இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது தான் இரண்டாவது பாகத்தின் டைட்டில். இதற்கு முன்பு அண்ணன் தம்பிகள் கதையை மையமாக வைத்து எடுத்திருந்தார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

தற்போது இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும் இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த இரண்டாவது சீசன் உடைய ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

சீரியல் குறித்த தகவல்:

இந்த மாத இறுதியிலேயே இந்த இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இரண்டாவது சீசனில் ஸ்டாலினை தவிர மற்ற எந்த நடிகர்களும் இல்லை என்பது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பலரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹிட் கொடுத்ததே அதில் நடிக்கும் நடிகர்கள் தான். தற்போது இரண்டாவது சீசனில் யாரும் இல்லை என்பது கஷ்டமாக இருக்கிறது. ஏன் முதல் சீசனில் வந்தவர்கள் இரண்டாவது சீசன் இல்லை என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலில் நடிக்கும் பிரபலங்கள்:

பாண்டியன் குடும்பத்தில் இருந்தவர்களில் வெங்கட் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசி தம்பியாக வரும் சரவணன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ஹேமாவும், அவரது அப்பாவாக நடித்த ரவியும் இரண்டாவது சீசனில் இருக்கிறார்கள். ஸ்டாலின் மனைவியாக நடித்த சுஜிதா, கதிர் இவர்கள் இருவரும் இரண்டாவது சீசனுக்கு நடிக்க மறுத்து விட்டார்கள். இவர்கள் இருவரின் மீது தான் சேனல் கடும் கோபத்திலேயே இருக்கிறது என்று சீரியலுக்கு நெருக்கமானவர்கள் பேட்டி அளித்து இருந்தார்கள்.

ஹேமா பதிவு;

இதனால் மீனா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஹேமாவும் இரண்டாவது சீசனிலும் நடிக்கிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் கமெண்ட் போட்டு இருந்தார்கள். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஹேமா போஸ்ட் ஒன்னு போட்டு விட்டார். அதில் அவர், தயவுசெய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வில் நான் இருப்பதாக தவறான செய்தியை பரப்பாதீர்கள். இதுவரையில் எதுவும் உறுதியாகவில்லை. ஏதாவது நல்ல விஷயங்கள் நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிப்பேன். நன்றி என்று கூறியிருக்கிறார். இந்த பதிவால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருந்தார்கள். அப்போ மீனாவும் இதில் இல்லையா? என்று சோகத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement