விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் பாண்டியன் சரவணன்-தங்கமயில் ஜோடியை ஹனிமூன் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து இருந்தார். அப்போது, சரியாக கவனிக்காமல் ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம்மை அதிக ரேட்டுக்கு புக் செய்து இருந்தார். ஓட்டலுக்கு சென்ற பின் தான் சரவணனுக்கு, ரூம்மின் மொத்த செலவு 26000 என்று தெரிந்தது. இதை சரவணன், கதிர்-செந்தில் இடம் சொல்லி இருந்தார். செந்தில், மீனாவிடம் பணம் கேட்க, அவர் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்.
கடைசியில் கதிர், பாண்டியனுக்கு தெரியாமல் அவர் மொபைல் போனில் இருந்தும், கல்லாவில் இருந்தும் ₹1000 எடுத்து இருந்தார். பாண்டியன், வீட்டில் கடை கணக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கணக்கில் ஒரு ₹1000 விடுகிறது என்று சொல்ல பாண்டியன் அதிர்ச்சி ஆகி, உன் மகன் இன்னைக்கி கடைக்கு வந்திருந்தான். அவன் வேலையாக தான் இருக்கும் வர சொல்லு என்று சொன்னவுடன் கதிர் வந்து, நான் எடுக்கவில்லை என்கிறார். கடைசியில் செந்தில், ஒருவர் குறைவாகத்தான் பணம் கொடுத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதை நான் மறந்து விட்டேன் என்று பொய் சொல்லி சமாளிக்க, பாண்டியனும் நம்பி விடுகிறார். அந்த சமயம் பார்த்து பாண்டியன் மொபைலுக்கு தங்கமயில், தாங்கள் எடுத்த போட்டோக்களை அனுப்பி இருந்தார். அதை பார்த்து ஆச்சரியப்பட்டும், தங்கமயிலை பற்றி பெருமையாகவும் பாண்டியன் பேசி இருந்தார். இன்னொரு பக்கம் தங்க மயிலின் அம்மா போன் செய்து, மாப்பிள்ளையை உன் வழிக்கு கொண்டு வா, நான் சொல்வதைப் போல் செய் என்று தேவையில்லாத வேலை பார்க்கிறார். தங்கமயிலும், தன் அம்மா சொன்னது போலவே சரவணனிடம் சண்டை போட்டு வெளியே வந்து விட்டார். சரவணனும் என்ன செய்வது என்று புரியாமல் தூங்கி விடுகிறார்.
சீரியல் கதை:
மறுநாள் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து நடந்ததை சொல்ல, நீ விட்டுப் விட்டுப் புடி என்று மீண்டும் அவருக்கு தவறாக சொல்லிக் கொடுக்கிறார். நேற்று எபிசோடில், வீடியோ கால் செய்து பேசி இருந்தார் தங்கமயில். அப்போது ஏன்? என்னுடைய போட்டோவிற்கு யாருமே எந்த ரிப்ளையும் பண்ணவில்லை என்று வருத்தப்பட்டு பேச எல்லோருமே அவருக்கு மெசேஜ் அனுப்பினார்கள். தன்னுடைய மாமனார் அனுப்பிய மெசேஜை கேட்டு தங்கமயில் ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், பாண்டியன் செய்ததை நினைத்து கோமதி புலம்பிக் கொண்டிருந்தார்.
நேற்று எபிசோட்:
அப்போது அங்கு வந்த பாண்டியனிடம் கோபமாக கோமதி பேச, பின் வெளியில் வந்த பாண்டியன், வீடியோ கால் செய்து கோமதியை சமாதானம் செய்கிறார். கோமதியும் பாண்டியன் பேச்சால் உருகி அன்பாக பேசுகிறார். இதையெல்லாம் ராஜீ- மீனா இருவருமே பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சரவணன்- தங்கமயில் இருவருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது சரவணன் புது சட்டையில் வெயிட்டர் சட்னி ஊத்தியதால் தங்கமயில் கத்துகிறார். ஒருவழியாக சரவணன் அவரை சமாதானம் செய்கிறார்.
இன்றைய எபிசோட் :
இந்நிலையில் இன்றைய எபிசோடில், தன் மாமனார் வாங்கி தந்த சட்டையில் கரை பட்டத்தை, தங்கமயில் உடனே துவைத்து விடுகிறார். இதை எல்லாம் சரவணன் தன்னுடைய அப்பாவிடம் சொல்ல, அவர் பெருமையாக தங்க மயிலை பற்றி பேசுகிறார். இதை செந்தில் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்ல கோமதியும் சூப்பராக இருக்கு என்று தங்கமயிலை பாராட்டி, வேலையை அவளிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என்று நக்கலாக பேசுகிறார். இதை பார்த்த ராஜி-மீனா கோபமாக பார்க்கிறார்கள். இன்னொரு பக்கம் கோமதியின் அண்ணன் வீட்டில் பெண் வீட்டார் வந்து பேசுகிறார்கள். இதை பார்த்து ராஜி அம்மா அதிர்ச்சியாகி நிற்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.