தங்கமயில் அம்மா, அப்பா செய்த வேலையால் பொங்கி எழும் பாண்டியன்- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
163
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அப்பத்தாவுக்கு நெஞ்சு வலி வந்ததால் ராஜி- கோமதி இருவருமே வேதனைப்பட்டு அழுதார்கள். பின் கோமதி தன்னுடைய அம்மாவிற்காக சமைத்து கொடுத்த போது பாண்டியன் எதுவும் சொல்லாமல் கொடுத்து விடு என்றார். அப்பத்தாவும் அதை வாங்கி சாப்பிட்டு சந்தோஷத்தில் தன் மகளை புகழ்ந்து தள்ளி இருந்தார். பின் தன் அம்மாவை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று கோமதி சொல்ல, மகன்கள் எல்லோரும் சேர்ந்து திட்டம் போட்டார்கள்.

-விளம்பரம்-

பின் ஹாஸ்பிடலுக்கு கோமதி- ராஜி இருவருமே போனார்கள். தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. கோமதி, தன்னுடைய அம்மாவிடம் மனம் விட்டு பேசி இருந்தார். ஆனால், இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியாது. இன்னொரு பக்கம் பழனியின் அண்ணன்கள் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி இருந்தார்கள். உடனே கதிரும் அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். மேலும், கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் கோபப்பட்டார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது நெஞ்சு வலி வந்தது போல மீண்டும் அப்பத்தா நடித்தார். உடனே டாக்டர் எல்லோரையும் திட்டி அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருந்தார். அதற்கு பின் வீட்டிற்கு வந்த கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி, ரொம்ப கேவலமாக பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த பாண்டியன், அவரும் திருப்பி திட்டுகிறார். இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். நேற்று எபிசோடில் கதிர், அப்பத்தாவை பார்க்க போனது உண்மை தான் என்று சொல்ல பாண்டியன் டென்ஷன் ஆகிறார்.

நேற்று எபிசோட்:

இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் கோமதி அண்ணன்கள் பேசி இருந்தார்கள். பின் மயக்கம் தெளிந்த கோமதி வெளியே வந்து எதுவும் பேச முடியாமல் இருந்தார். பின் பாண்டியன், அவர்கள் உங்களுக்கு மட்டும் அம்மா இல்லை. கோமதிக்கும் தான் அம்மா என்று கோமதிக்கு ஆறுதலாக பேசியவுடன் மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. கோமதி அண்ணன்களும் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து சென்று விட்டார்கள். பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

வீட்டில் எல்லோருமே சந்தோஷமாக பேசிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், தன்னை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று தங்கமயில் ரொம்பவே வருத்தப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அரசி வெளியே போன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த சக்தியின் அப்பா, நீ எப்படியாவது அரசியை திருமணம் செய்து கொள். பாண்டியனை இப்படித்தான் பழி வாங்க முடியும் என்று தேவையில்லாத யோசனைகளை தன் மகனுக்கு கொடுக்கிறார். பின் செந்தில்- மீனா, ராஜி-கதிர் ஜோடிகள் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:

இன்னொரு பக்கம் தங்கமயில், நான் என்ன தவறு செய்து விட்டேன். ஏன் என்னிடம் யாருமே பேச மாட்டேங்கிறீர்கள்? என்று அழுகிறார். உடனே சரவணன் அவரை சமாதானம் செய்கிறார். இதை எல்லாம் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து பேசி இருந்தார். மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று கேட்கிறார் தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொல்கிறார். பின் தங்கமயில் அம்மா-அப்பா கொஞ்சம் ஓவராக பேசி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement