பாண்டியன் கோபத்தால் அந்தர் பல்டி அடித்த தங்கமயில் அப்பா, அம்மா- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
157
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஹாஸ்பிடலில் தன் அம்மாவை பார்த்து கோமதி ஆனந்தத்தில் அழுது புலம்பி இருந்தார். ஆனால், ராஜி பேசியும் அவருடைய அம்மா முகம் கொடுத்து கூட பேசவில்லை. ஆனால், இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியாது. பின் கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் பயங்கரமாக கோபப்பட்டார்கள். அப்போது நெஞ்சு வலி வந்தது போல மீண்டும் அப்பத்தா நடித்தார். உடனே டாக்டர் எல்லோரையும் திட்டி அனுப்பி விட்டார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம் வீட்டில் கோமதி, தன் அம்மாவை பார்த்த சந்தோஷத்தில் இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த கோமதியின் அண்ணன்கள், பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி கேவலமாக பேசி இருந்தார்கள். அந்த சமயம் வந்த பாண்டியனுக்கு ஒன்னும் புரியவில்லை. இதையெல்லாம் உள்ளே இருந்து கேட்ட கோமதி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். பின் கதிர், அப்பத்தாவை பார்க்க போனது உண்மை தான் என்று சொல்ல பாண்டியன் டென்ஷன் ஆனார். இதுதான் சந்தர்ப்பம் என்று மீண்டும் கோமதி அண்ணன்கள் பேசி இருந்தார்கள். பின் மயக்கம் தெளிந்த கோமதி வெளியே வந்து எதுவும் பேச முடியாமல் இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

உடனே பாண்டியன், கோமதிக்கு துணையாக நின்று பேசியதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. கோமதி அண்ணன்களும் எதுவும் பேச முடியாமல் வாய் அடைத்து சென்று விட்டார்கள். பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார். கடந்த வாரம் அரசி வெளியே போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த சக்தியின் அப்பா, பாண்டியனை பழி வாங்க தேவையில்லாத யோசனைகளை தன் மகனுக்கு கொடுத்தார்.

நேற்று எபிசோட்:

இன்னொரு பக்கம் தங்கமயில் அழுது புலம்ப, சரவணன் அவரை சமாதானம் செய்தார். பின் இதை எல்லாம் தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். பின் தங்கமயில் அம்மா-அப்பா கொஞ்சம் ஓவராக பேசி இருந்தார்கள். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்படுகிறார்.

-விளம்பரம்-

சீரியல் ட்ராக்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், பணத்திற்காக இங்கு யாரும் பேசவில்லை. செய்த தவறை அப்போதே சொல்லி இருந்தால் இந்த அளவிற்கு வந்தது என்று கோபப்பட, தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். இதனால் பாண்டியனும் அமைதியாக விடுகிறார். பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைத்து அழைத்தேன். இதைப் பற்றி தான் சொல்ல வந்தேன் என்று அந்தர் பல்டி அடித்து சமாளிக்கிறார்.

இன்றைய எபிசோட்:

பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதிக்கிறார். அதற்குப்பின் சரவணன், தன் மாமனார்- மாமியார் பேசியதை பற்றி வருத்தப்பட பாண்டியன் அவருக்கு ஆறுதல் சொல்லி அனுப்புகிறார். இன்னொரு பக்கம் பஸ் ஸ்டாப்பில் மீனா- ராஜி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த கதிரை வழிமறித்து மீனா, ராஜீயை சைக்கிளில் ஏற்ற சொல்லி கேட்கிறார். கதிரும் ராஜீயை அழைத்து செல்கிறார். இன்னொரு பக்கம் கோமதி செய்த வேலையை நினைத்து அவருடைய அண்ணன்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பின் எப்படியாவது சக்திக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் யோசிக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement