விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, டியூஷன் விஷயத்தை பாண்டியன் இடம் சொல்ல வேண்டும் என்று தன் மாமியாரை வழக்கம் போல் மிரட்டி இருந்தார். இதனால் ரூமில் கோமதி, எப்படியாவது ராஜி டியூஷன் விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று நடந்து கொண்டே இருந்தார். பின் கோமதி ஏதேதோ கதையை சொல்ல, பாண்டியன் கோபப்பட்டார். கடைசி வரை அவரால் சொல்லவே முடியவில்லை. பின் ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை பேசினீர்களா? என்று கேட்டதற்கு, கோமதி இல்லை என்று சமாளித்தார். பின் பெண்கள் எல்லோரும் தைரியம் கொடுத்து பாண்டியனிடம் பேச கோமதியை அனுப்பினார்கள்.
கோமதி பயத்தில் என்னென்னவோ சொல்லி உளறி இருந்தார். உடனே ராஜி, பாண்டியனிடம் டியூஷன் எடுக்கும் விஷயத்தைப் பற்றி சொல்ல, அவர் கோபத்தில் பார்த்தார். ராஜி சொன்னதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். ஆனால், பாண்டியன் எதுவுமே பேசவில்லை. அப்போது ராஜி தன் தரப்பு நியாயத்தை பொறுமையாக எடுத்து சொன்னார். கடைசியில் பாண்டியன் எதுவுமே பேசாமல் சென்று விட்டார். வீட்டில் உள்ளவர்களும் என்ன சொல்லுவாரு என்ற பயத்தில் இருந்தார்கள். கதிர், ராஜி பேசியது சரி என்று பாராட்டி இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, தன்னுடைய கணவர் என்ன சொல்வாரோ? என்ற பயத்தில் மீனாவிடம் புலம்பி இருந்தார். இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், ராஜி சொன்னதை நினைத்து எல்லோரிடம் பெருமையாக பேசி இருந்தார்.
இதைக் கேட்டு செந்தில் ரொம்ப ஷாக் ஆனார். நேற்று எபிசோட்டில், வீட்டில் எல்லோரும் பாண்டியன் என்ன முடிவு எடுப்பாரோ? என்ற பதட்டத்திலேயே இருந்தார்கள். அப்போது வந்து பழனி, பாண்டியன் கோபமாக இல்லை என்று சொன்னவுடன் கோமதி சந்தோஷப்பட்டார். பின் தங்கமயில் தன் கணவருக்காக சாப்பாடு கட்டி வைத்தார். அதை பழனி கொண்டு போய் கொடுத்தார்.
நேற்று எபிசோட்:
பின் தங்கமயிலுக்கு போன் செய்து சரவணன் பேசியும், அவர் சரியாக பேசவில்லை. பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜி டியூஷன் எடுப்பதற்கு சம்மதம் கொடுக்க, எல்லோரும் சந்தோஷப்பட்டார்கள். அப்போது பாண்டியன், வீட்டிற்கு அழைத்து வந்து டியூஷன் எடுக்க கூடாது, தாமதமாக வரக்கூடாது, படிப்பையும் விடாமல் செய்யணும் என்று கண்டிஷன் போட, ராஜி ஒத்துக் கொண்டார். பின் ராஜி- கதிர் இருவரும் டியூசனுக்கு சம்மதம் கிடைத்தது நினைத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், பாண்டியன் எடுத்த முடிவை நினைத்து செந்தில்- மீனா இருவருமே ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில் தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்து நடந்ததை சொன்னார். அப்போது பாண்டியன் தன்னையும் வேலைக்கு போக சொன்னதை சொல்ல, அவர் அதிர்ச்சியாகி ஏதோ சொல்லி சமாளி என்கிறார். அந்த சமயம் வந்த சரவணன், நீ வேலைக்கு போ தங்கமயில் என்கிறார். ஆனால், அவர் முடியாது என்கிறார்.
சீரியல் ட்ராக்:
மறுநாள் காலையில் ராஜி -மீனா இருவரும் சந்தோஷமாக கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதி கோயிலில் இருந்து வந்தார். தன்னுடைய அம்மா எதிரில் இருப்பதை பார்த்த கோமதி, மீனா மூலம் பிரசாதம் கொண்டு போய் கொடுத்தார். இதை அறிந்த கோமதியின் அண்ணன், அவரின் அம்மாவை திட்டி கத்துகிறார். இதை பார்த்த பாண்டியனும் அவருக்கு பதிலடி கொடுத்து அனுப்புகிறார். இதையெல்லாம் பார்த்து ராஜி, கோமதி இருவருமே சந்தோஷப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.