விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வடிவு அண்ணன், நகை பற்றிய உண்மையை வீட்டில் சொல்ல ராஜி அப்பா பயங்கரமாக சண்டை போட்டார். இருந்தும் நகை எங்கே இருக்கு? என்று வடிவு சொல்லவில்லை. கடைசியில் உண்மையை சொல்லும் வரை இந்த வீட்டில் தண்ணி, சாப்பாடு எதுவுமே சாப்பிடக்கூடாது என்று சொல்லிவிட்டு ராஜி அப்பா சென்று விட்டார். இன்னொரு பக்கம், சரவணன்-தங்கமயில் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக எடுத்த புகைப்படத்தை எல்லாம் தெரியாமல் ஃபேமிலி குரூப்பில் அனுப்பி இருந்தார்கள்.
இதை பார்த்த செந்தில், கதிர், சித்தப்பா மூவருமே அதிர்ச்சியாகி இருந்தார்கள். அந்த சமயம் பார்த்து பாண்டியன் அந்த போட்டோவை பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி இருந்தார். பின் மீனா- ராஜி- கோமதி எல்லோருமே தங்கமயில் அனுப்பிய போட்டோவை பார்த்து கிண்டல் கேலி செய்து இருந்தார்கள். இதை வைத்து மீனா, பாண்டியனிடம் வம்பு இழுத்தார். கடைசியில் செந்தில், சரவணனுக்கு போன் செய்து போட்டோ விஷயத்தை சொல்ல, சரவணன்- தங்கமயில் இருவரும் அதிர்ச்சியாகி இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே தங்கமயில் போட்டோவை டெலிட் செய்ய பார்த்தார். ஆனால், மாத்தி பண்ணி விட்டார். மேலும், தங்கமயில் அனுப்பிய போட்டோவை வைத்து பின் ராஜி- மீனா இருவரும் போன் செய்து ஒவ்வொரு போட்டோவை பற்றி பங்கமாக கலாய்க்கிறார்கள். இன்னொரு பக்கம் வீடியோ கால் மூலம் செந்தில், கதிர் இருவரும் சரவணனுக்கு போன் செய்து கலாய்க்கிறார்கள். நேற்று எபிசோடில் ராஜியின் அப்பா, நகை எங்கே? என்று வடிவை கேட்டு கோபப்பட்டு பேசுகிறார்.
நேற்று எபிசோட்:
பின் இருவருக்கும் இடையே பயங்கரமாக சண்டை நடக்கிறது. கடைசியில் வடிவை அடித்து கீழே தள்ள போகும்போது மாரி, உங்கள் மகளுக்கு தான் கொடுத்தோம் என்று உண்மையை உளறி விடுகிறார். இன்னொரு பக்கம் ராஜியின் சித்தப்பாவிற்கு டியூசன் எடுக்கும் விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகி பயங்கரமாக சண்டை போட்டு வந்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் ராஜி பயத்தில் இருக்கிறார். பின் வீட்டிற்கு வந்த சித்தப்பா, தன்னுடைய அண்ணனிடம் நடந்தது எல்லாம் சொல்ல, அண்ணனும் நகை விஷயத்தை அவரிடம் சொல்லி இருந்தார்.
இன்றைய எபிசோட்:
ஆத்திரத்தில் இருவருமே பாண்டியனிடம் சண்டை போடுகிறார்கள். பதிலுக்கு பாண்டியனும் சண்டைக்கு போகிறார். கடைசியில் சித்தப்பா, வீட்டு மருமகள்களை வேலைக்கு அனுப்பி சாப்பிடுகிறாயே, வெட்கமே இல்லையா? என்று மோசமாக பேசுகிறார்கள். அப்போது ராஜி, மீனாவிடம் நடந்ததை சொல்ல இருவருமே அதிர்ச்சியாகி நிற்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில், கோமதி அண்ணன்கள், பாண்டியனை ரொம்ப கேவலமாக பேசுகிறார்கள். அப்போது ராஜி டியூஷன் எடுக்கும் விஷயம் தெரிந்து பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக விடுகிறார்.
சீரியல் ட்ராக்:
அதோடு ராஜிக்கு நகை கொடுத்த உண்மையும் தெரிந்து விடுகிறது. கடைசியில் எங்கள் வீட்டுப் பெண்கள் வேலைக்கு போவது எங்கள் விருப்பம் என்று பாண்டியன் பேசிவிட்டு சென்று விடுகிறார். பின் வீட்டில் கோமதி பயங்கரமாக ராஜுவை திட்டிக் கொண்டிருக்கிறார். பாண்டியன் எதுவுமே பேசாமல் அமைதியாக நிற்கிறார். எதற்கு நீ வேலைக்கு போனாய்? என்ன காரணம்? என்று கேட்டதற்கு ராஜி, கதிர் இரவு-பகல் என்று பார்க்காமல் வேலைக்கு போவது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. அதனால் தான் போனேன் என்று சொல்ல கதிர் வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.