செந்தில் செய்த வேலையால் பாண்டியன் சொன்ன வார்த்தை, மீனா முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 3/10/2025

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மளிகை கடையில் வழக்கம் போல மாணிக்கம் நாட்டாமை செய்து கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து தங்க மயிலும் மளிகை கடைக்கு வேலைக்கு வந்தார். இதை பார்த்து பழனிக்கு, என்ன சொல்வது என்று தெரியவில்லை. சரவணனுக்கு பயங்கர கடுப்பாக இருந்தது. தங்கமயிலும் மாணிக்கமும் மளிகை கடையில் செய்யும் அட்ராசிட்டியை பார்த்து சரவணனுக்கு கோபம் கொந்தளித்தது. இருந்தாலும் அடக்கி வைத்துக் கொண்டு அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் கதிர்-ராஜி இருவரும் பேசி கொண்டு இருந்தார்கள்.

நேற்று எபிசோட்டில் செந்தில் ஒரு ரோட்டோரமாக நின்று வேலை செய்து கொண்டிருக்கிறார். அதை பார்த்த பாண்டியன் செந்திலைக் கூப்பிட்டு கலாய்க்கிறார். என்னென்ன பேச்சு பேசின, இதுதான் ஏசி ரூமா என்றெல்லாம் பங்கமாக பாண்டியன் கலாய்க்கிறார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை, பயங்கரமாக கோபப்படுகிறார். பின் இதைப்பற்றி எல்லாம் மீனாவிடம் சொல்லி புலம்புகிறார் செந்தில். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது செந்தில், நானும் மீனாவும் குவாட்டரஸ் போகப் போகிறோம் என்று சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே பதறுகிறார்கள். அப்போது மீனா, எனக்கு குவாட்டரஸ் கொடுத்திருப்பது உண்மை தான். ஆனால், எனக்கு அங்கு போக விருப்பமில்லை. இதெல்லாம் செந்தில் உடைய முடிவு தான் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே செந்தில் இடம் போக வேண்டாம் என்று கேட்கிறார்கள். கோமதி ரொம்பவே கெஞ்சி கதறுகிறார். ஆனால், செந்தில் மனமிரங்கவே இல்லை. குவாட்டர்ஸுக்கு போவதில் உறுதியாக இருக்கிறார். பாண்டியன் அதிர்ச்சியில் அமைதியாக இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில், நான் குவாட்டரஸ் போவதில் உறுதியாக இருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்கிறார். கோமதி, கெஞ்சி கதறி அழுகிறார். செந்தில், முகத்தில் அடித்தது போல் தன்னுடைய அம்மாவை பேசி விடுகிறார். உடனே கோபப்பட்ட பாண்டியன், யாருக்கு என்ன தோணுதோ செய்யட்டும். நீ எதையும் பேசாதே கோமதி என்று அங்கிருந்து சென்று விடுகிறார். பின் கோமதி ரொம்பவே அழுது புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது மீனா, எனக்கு இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லை. உங்கள் மகன்தான் செய்கிறார். எனக்கு குவாட்டரஸ் போக விருப்பமில்லை என்று சொல்லி புரிய வைக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் கோமதியால் செந்தில் செய்ததை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வேதனையில் கோமதி தூங்காமல் அழுது கொண்டு இருக்க, பாண்டியன் ஆறுதல் சொல்கிறார். அதற்குப்பின் ரூமில் செந்தில்- மீனா இருவருமே குவாட்டர்ஸ் போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். உடனே மீனா, உங்களுடன் நான் வருகிறேன். ஆனால், எனக்கு சுத்தமாக அதில் விருப்பமும் இல்லை. வீட்டில் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்கிறார். மறுநாள் காலையில் செந்தில், பால் காய்ச்ச போகிறோம். நீங்கள் எல்லோரும் வந்துவிடனும் என்று சொல்கிறார். பின் மீனா, எனக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. இது எல்லாமே செந்தில் எடுத்த முடிவு தான் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

behindtalkies AMP · Quick view
View full