விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ஹாஸ்பிடலுக்கு கோமதி வந்த விஷயம் அறிந்த அவர் அண்ணன்கள் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியன் வீட்டு வாசலில் கத்தி கேவலமாக பேசி இருந்தார்கள். உடனே பாண்டியன், கோமதிக்கு துணையாக நின்று பேசியதை கேட்டு மொத்த குடும்பமே ஷாக் ஆகி இருந்தது. பின் கோமதி தன்னுடைய கணவனிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு துணையாக நின்று பேசியதற்கு நன்றி சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள்.
அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளித்ததால் பாண்டியனும் அமைதியாக விட்டார். பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைப்பதால் எல்லோரையும் அழைக்க, பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா செய்த வேலையை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். அதற்கு அவர்களும் மன்னிப்பு கேட்க, தங்கமயில் பயங்கரமாக தன்னுடைய அப்பா அம்மா மீது கோபப்பட்டு கத்துகிறார். நேற்று எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே பொங்கல் வைப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், தங்கமயில் பேச வரும்போது மட்டும் பாண்டியன் முகம் கொடுத்து கூட பேசவில்லை.
நேற்று எபிசோட்:
உடனே கதிர், ராஜி இருவரும் தங்கமயிலுக்கு சப்போர்ட் செய்து பேசி இருந்தார்கள். ஆனால், அதை எல்லாம் கண்டுக்காமல் பாண்டியன் எழுந்து சென்று விட்டார். உடனே கோமதி, கோவிலுக்கு எல்லோரும் சீக்கிரமாக தயாராகுங்கள் என்று சொல்லிவிட்டு சொன்னார். அதற்குப்பின் தங்கமயில், மீனா, ராஜி ,கோமதி சாப்பிட்டுக் கொண்டு கோயிலுக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் ஒவ்வொரு ஜோடியுமே கோயிலுக்கு கிளம்புவதற்கு மும்முரமாக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே தயாராகி கோவிலுக்கு செல்கிறார்கள். எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தங்கமயில் பயந்து கொண்டு இருக்கிறார். இன்னொரு பக்கம் பொங்கல் வைப்பதற்கு தேவையான எல்லாத்தையும் வாங்கிக்கொண்டு தங்க மயிலின் அப்பா, அம்மா கோயிலுக்கு சென்று விடுகிறார்கள். அங்கு வருபவர்களிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளிக்கிறார்கள். அப்போது பாண்டியனின் மூத்த மகள் வருகிறார். அவர் வழக்கம் போல் கேள்வி கேட்க தங்கமயில் அம்மாவும் சமாளிக்கிறார்.
சீரியல் ட்ராக்:
பின் பாண்டியன் குடும்பமும் கோவிலுக்கு வந்ததால் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைக்கிறார்கள். எல்லோருக்கும் தங்கமயில் சாப்பாடு பரிமாறுகிறார். ஆனால், பாண்டியன் மட்டும் தங்கமயில் பேசுவதற்கு சரியாக பதில் சொல்லவில்லை. பின் பாண்டியன் ஓரிடத்தில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தார். அந்த இடத்திலிருந்த கூரை அவர் மீது சரிந்து விழ பார்த்தது. உடனே தங்கமயில் அவரை தள்ளிவிட்டு காப்பாற்றுகிறார். ஆனால், தங்கமயில் மேல் அந்த கூரை விழுந்ததால் மொத்த பேருமே பதறுகிறார்கள். தங்கமயிலின் தலையில் அடிபட்டு இருக்கிறது. இதனால் பாண்டியன் எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறார் இத்துடன் சீரியல் முடிகிறது.