ராஜியால் எரிமலையாய் வெடிக்கும் கோமதி அண்ணன், சோகத்தில் தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
260
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் ராஜி டியூசன் எடுக்கும் விஷயம் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிந்து பயங்கர கலவரம் ஆகி இருந்தது. இதனால் மொத்த குடும்பமே ராஜி-மீனாவிடம் பேசாமல் இருந்தார்கள். பின் கோமதியிடம் ராஜி, மீனா இருவருமே மன்னிப்பு கேட்டும் அவர் முகம் கொடுத்து கூட பேசாமல் திட்டிக் கொண்டிருந்தார். அதோடு இந்த விவகாரம் தெரிந்த தங்கமயில், மீனா- ராஜுவை குறை சொல்லி இருந்தார். இன்னொரு பக்கம் நகையை பேங்கில் இருந்து வீட்டுக்கு கோமதி எடுத்து வந்து அவரவர்கள் நகையை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

-விளம்பரம்-

பின் ராஜி அப்பாவிடம் நகையை கொடுத்து விட்டார்கள். அதன் பின் மீனாவும் தன்னுடைய மாமியாரை எவ்வளவோ சமாதானம் செய்ய பார்க்கிறார். ஆனால், அவர் சமாதானமே ஆகவில்லை. அப்போது தங்கமயில், தன்னுடைய நகைகளை எடுத்து பார்க்க, நகைகள் எல்லாம் கருகிப் போய் இருந்தது. உடனே தங்கமயில் யாருக்கும் தெரியாமல் மறைத்தார். பின் இதை தன் அம்மா வீட்டில் வைக்க வேண்டும் என்று யோசித்தார். அப்போது கோமதி பேங்கில் நகையை வைக்கலாம் கொடு என்று சொன்னவுடன் தங்கமயில் தடுமாறி இருந்தார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பாண்டியன் வீட்டில் உட்கார்ந்து பேசும்போது, மீனா தண்ணீர் கொடுக்க பாண்டியன் வாங்காமல் தங்கமயில் இடம் தண்ணீர் வாங்கிக் குடித்தார். இதையெல்லாம் பார்த்து மீனா வருத்தப்பட்டார். அதன் பின் வீட்டில் ராஜி-கதிர், செந்தில்- மீனா இடையே சண்டை வந்து நான்கு பேரும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், தன் அம்மாவிற்கு போன் செய்து நடந்ததை சொல்லி பயப்பட, அந்த சமயம் பார்த்து சரவணன் வர ஏதோ கதை சொல்லி சமாளித்தார்.

சீரியல் கதை:

மேலும், ராஜி- மீனா இருவருமே தன்னுடைய மாமியாரிடம் பேச சொல்லி கட்டாயப் படுத்தி இருந்தார்கள். ஆனால், அவர் முடியாது என்று சொல்ல, நாங்கள் வீட்டை விட்டு போகட்டுமா? என்று கேட்டார்கள். பின் தங்கமயில், கோமதியை சமாதானம் செய்தார். இருந்துமே கோமதி கோபமாகவே பேசி இருந்தார். கடைசியில் நீங்கள் மூவரும் ஒற்றுமையாக இருந்து பார்த்து நானே பொறாமை பட்டிருக்கிறேன், பேசுங்கள் என்று தங்கமயில் சொல்ல, ராஜி-மீனா இருவருமே மன்னிப்பு கேட்க, கோமதி மன்னித்து விட்டார்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோடில், தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் தன் வீட்டில் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க அவர், எதற்கு அவர்களை சேர்த்து வைத்தாய்? அவர்கள் ஒன்றாக இருந்தால் உன்னை தனியாக்கி விடுவார்கள் என்று அவருக்கு தேவையில்லாதது எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் ராஜி, மீனா, கோமதி மூவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயில் வந்த உடனே அவர்கள் அமைதியானால் தங்க மயிலுக்கு தன் அம்மா சொன்னதை நினைத்து வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் கோமதியின் அண்ணன் வீட்டில் கலவரம் வெடிக்கிறது.

சீரியல் ட்ராக்:

ராஜி ஓடிப்போன விஷயத்தை வைத்து பெண் கொடுக்கவில்லை என்று சொன்னவுடன் ராஜியும் அவருடைய அம்மாவையும் தான் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராஜி எனக்கு என் மகள், முக்கியம் என்று சொன்னவுடன் ராஜியின் அப்பா கத்துகிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று அவருடைய தம்பி ஏத்தி விடுகிறார். பின் வேலை செய்யும் இடத்தில் மீனா, செந்திலை நினைத்து ரொம்ப வருத்தப்படுகிறார். மீனா எவ்வளவு போன் செய்தும் செந்தில் எடுக்கவே இல்லை. மெசேஜ் எல்லாம் போடுகிறார். கடைசிவரை அவர் எந்த ஒரு பதிலையும் சொல்லவில்லை. இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement