-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சீரியல்ஸ்

கதிருக்காக தங்கமயில் மீது கோபப்பட்ட சரவணன், பாண்டியன் வீட்டில் வெடிக்கும் கலவரம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
252

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன் பழைய கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அக்கவுண்டில் 10000 இல்லை என்று சொல்ல, செந்தில்-இருவரும் சித்தப்பு பயந்தார்கள். கதிர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் பாண்டியன், கதிர் மீது சந்தேகப்பட்டு திட்டினார். உடனே ராஜி கோபப்பட்டு, கதிருக்காக சப்போர்ட் செய்ய, பாண்டியன் எதுவும் பேசாமல் அங்கு இருந்து கிளம்பி விட்டார். பின் கதிர், செந்தில், சித்தப்பா மூவருமே பாண்டியன் அக்கவுண்டில் எடுத்த பணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது வந்த சரவணன், உண்மை தெரிந்து வருத்தப்பட்டு அப்பாவிடம், நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என்று சொல்ல, கதிர் வேணாம் என்று தடுத்து விட்டார். பின் செந்தில் தங்கமயிலின் ஆதார் கார்டை கொடுக்க, தங்கமயில் பிடுங்கி வைத்துக் கொண்டார். மறுநாள் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு சரவணன்- தங்கமயில் உடன் மீனா- செந்திலை போக சொன்னார் பாண்டியன். ஆனால், தங்கமயில் வேண்டாம் என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார். இன்னொரு பக்கம், சக்திக்கு திருமணம் ஆகவில்லை என்ற கோபத்தில் அவருடைய அப்பா இருந்தார். அப்போது சக்தி பேசுவதற்கு அவருடைய அண்ணன் முகம் கொடுத்து பார்த்து பேசவில்லை என்று சக்தி அப்பா கோபப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் அண்ணன் – தம்பிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சக்திக்கு நான் எப்படியாவது திருமணம் செய்து வைக்கிறேன் என்று அண்ணன் சொன்னார். இந்த வாரம் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு தங்கமயில்-சரவணன் உடன் சித்தப்பு-கதிர் போனார்கள். தங்கமயில் ரொம்பவே பதட்டத்திலும், பயத்திலுமே இருந்தார். நல்லபடியாக சரவணன்- தங்கமயில் கல்யாணம் ரெஜிஸ்டர் செய்யப்பட்டது. அதற்கு பிறகு தான் தங்கமயில் பெருமூச்சு விட்டு ஆதார் கார்டை தன் கையில் பத்திரமாக மறைத்து வைத்துக் கொண்டார். நேற்று எபிசோட்டில், அக்கவுண்டில் பணம் இல்லாததை பற்றி விசாரிக்க பாண்டியன் வங்கிக்கு போக, எல்லா உண்மைகளும் தெரிந்து விடுகிறது.

நேற்று எபிசோட்:

-விளம்பரம்-

பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், கதிரை அறைந்து விட்டார். இதனால் எல்லோருமே அதிர்ச்சியாக, பணத்தை எடுத்தது கதிர் தான் என்று பாண்டியன் சொன்னதை யாரும் நம்பவில்லை. கடைசியில் உண்மையை கதிர் ஒத்துக் கொண்ட பிறகு ராஜுவால் எதுவுமே பேச முடியவில்லை. பணத்தை உடனடியாக கொடுத்து தீர வேண்டும், இல்லை என்றால் அவ்வளவுதான் என்று பாண்டியன் கண்டமேனிக்கு கத்துகிறார். உடனே சரவணன், உண்மையை சொல்லப் பார்க்கிறார். ஆனால், செந்தில்- சித்தப்பா இருவரும் அவரை தடுத்து அமைதியாக்கி விடுகிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்று எபிசோடில், உண்மையை சொல்லவிடாமல் கதிர்-செந்தில் இருவருமே சரவணனை சமாதானம் சொல்கிறார்கள். இருந்தாலுமே, சரவணன் குற்ற உணர்ச்சியில் வருத்தப்படுகிறார். பின் எல்லோருமே எப்படியாவது பணத்தை ரெடி பண்ண புலம்பிக் கொண்டும், அதற்கான வேலையும் மும்முறமாக செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தங்கமயில், கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் சரவணனுக்கு கோபம் வந்து, உன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் வந்தது. நம்ம ஹோட்டலில் தங்க முடியாமல் இருந்தபோது கதிர் தான் அந்த பணத்தை அனுப்பினான்.

சீரியல் ட்ராக்:

அவனுக்காக எதுவும் செலவு செய்யவில்லை என்று சொல்ல, தங்கமயில் அமைதியாகி விடுகிறார். உடனே தங்கமயில், இந்த உண்மையை வீட்டில் சொல்ல வேண்டாம். எப்படியாவது பணத்தை ரெடி பண்ணி கொடுத்து விடுங்கள் என்று சொல்ல சரவணனுக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. இன்னொரு பக்கம் கோமதி வழக்கம் போல் ராஜியால் தான் இந்த நிலைமை என்று திட்டிக் கொண்டிருக்க கோபத்தில் ராஜி நான் வேலைக்கு போகிறேன் என்று மாமியார்-மருமகள் இடையே சண்டை நடக்கிறது. மறுநாள் காலையில் எல்லோருமே வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறது? என்று பயத்திலேயே இருக்கிறார்கள். ராஜி தன்னுடைய நகையை கழட்டி கதிரிடம் கொடுத்து பணத்தை ரெடி பண்ண சொல்கிறார். ஆனால், கதிர் வாங்க மறுத்து விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news