விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார் பாண்டியன். தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார்.
இன்னொரு பக்கம், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார். மேலும், கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டத்தால் பாண்டியன் ஒத்து கொள்கிறார். ஆனால், கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்க கடைசியில் இருவரும் சண்டை போட்டு, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க ஒத்து கொள்கிறார் பாண்டியன்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போகிறார். பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக லீவு கேட்க சொல்ல எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் கோவப்பட்டு இருந்தார். அதற்குப் பின் ரூமில் ஒவ்வொரு ஜோடியும் ஹனிமூன் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். மீனா- ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை. எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்தி இருந்தார். இதனால் கோமதி வருத்தத்தில் இருக்க எப்படியோ மீனா,ராஜி இருவரும் மாமியாரை சமாதானம் செய்து விடுகிறார்கள்.
சீரியல் கதை:
பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்கிறார். அப்போது, 5000 தான் ஆகும் என்று ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம் புக் செய்து விடுகிறார். நேற்று எபிசோடில் ராஜி- கதிர் இருவருமே தங்களுடைய அப்பத்தாவை நினைத்து பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம், செந்தில் அரசாங்க வேலைக்கு செல்வது குறித்து மீனா அறிவுரை சொல்லி இருந்தார். அதை எல்லாம் கேட்டு செந்தில், இவ்வளவு இருக்கிறதா? என்று பயந்து போகிறார். பின் இதை படியுங்கள் என்று மீனா ஒரு புத்தகம் கொடுத்தார். ஆனால், செந்தில் தூங்கி விட்டார்.
நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தங்கமயில் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். அப்போது சரவணன், உண்மையிலேயே ரூம் உடைய செலவு 5000 தானா? இதற்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாது என்று சொல்லி தூங்கி விட்டார். அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 15000 கட்ட வேண்டும் என்று தங்க மயிலுக்கு மெசேஜ் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் கால் செய்து நடந்ததை சொல்ல, அவர் சென்னைக்கு போன பிறகு சொல்லு என்கிறார். ஆனால், தங்கமயில் பொய் மேல் பொய் சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்று பயப்படுகிறார்.
சீரியல் ப்ரோமோ:
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் புரோமோவில், மீனாவை அவருடைய அப்பா அவமானப்படுத்தியதால் செந்தில், மீனாவின் அப்பாவிடம் உங்களுக்கு அரசாங்க வேலையில் இருக்கும் மாப்பிள்ளை கிடைக்கவில்லை என்ற கோபத்தை தானே மீனா மேல் காட்டுகிறீர்கள். நான் அரசாங்க வேலைக்கு போய், இதே வீட்டிற்கு மீனாவை அழைத்துக் கொண்டு வருவேன் என்று சவால் விடுகிறார். இதை கதிர் வீடியோவாக எடுத்து மீனாவிடம் காண்பிக்க அதை பார்த்து மீனா கண்கலங்கி அழுகிறார். இனிவரும் நாட்களில் செந்தில் அரசாங்க வேலைக்கு செல்வாரா? மீனாவின் ஆசை நிறைவேறுமா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.