மீனா போட்ட மெசேஜால் பதறி போய் பயத்தில் தேடி அலைந்த செந்தில், கதிர்- விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
225
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் மீனா மன்னிப்பு கேட்டும் செந்தில் மனம் இறங்கவில்லை. ராஜி- மீனா வெளியில் படுத்ததை பார்த்து கோமதி தூங்க வெளியே வந்தார். இருவரும் வருத்தப்பட்டு தன்னுடைய மாமியாரின் மடியிலேயே படுத்து அழுதார்கள். மறுநாள் காலையில் வேலைக்கு கிளம்பும் போது மீனா தன்னுடைய மாமனாரிடம் பேச, அவர் முகம் கொடுத்து கூட பேசாததால் வருத்தப்பட்டு கொண்டே சென்றார். பின் பாண்டியன் வருவதை பார்த்து ராஜி அந்த இடத்திலிருந்து கிளம்பி விட்டார்.

-விளம்பரம்-

இதை கவனித்த கோமதி, பாண்டியன் இடம் பேச அவரும் தான் செய்த தவறை உணர்ந்தார். மேலும், கடைக்கு வந்த மீனா, நான் செய்தது தவறுதான். மன்னித்து விடுங்கள் என்று ரொம்ப வருத்தப்பட்டு அழ, பாண்டியன் மனமும் மாறி மீனாவை மன்னித்து விட்டார். வீட்டில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை குறித்து கோமதி அவரின் தம்பியிடம் பேசி இருந்தார். இதைக் கேட்ட தங்கமயில் சந்தோசப்பட்டு தன்னுடைய அம்மாவிடம் போனில் சொன்னார். பின் மீனா- ராஜி இருவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

அப்போது ராஜு, நான் மீண்டும் டியூஷன் எடுக்க போகிறேன் என்று சொன்னவுடன் மீனா அதிர்ச்சியாகி வீட்டில் சொல்லிவிடு என்று அறிவுரை செய்தார். அந்த சமயம் வந்த தங்கமயில், பாண்டியனின் பிறந்தநாளை பற்றி சொல்லி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு வெளியே வந்தார்கள். பின் வாங்கி தந்த தின்பண்டத்தை பாண்டியன் கொடுத்தார். இதை பார்த்து செந்தில்- கதிர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

சீரியல் கதை:

பின் ரூமில் செந்தில்- மீனா இடையே சண்டை நடக்க, கோபத்தில் மீனா தூங்க வெளியே வந்தார். அப்போது செந்தில், மீனாவை தேடி மொட்டை மாடிக்கு வந்தார். அதை கவனித்த மீனா உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டார். நேற்று எபிசோடில், கதிர் தாழ்ப்பாள் கூட போடாமல் குளிக்க, அப்போது உள்ளே சென்ற ராஜி, கதிரைப் பார்த்து கத்தி இருந்தார். பின் ரூமில் இதைப்பற்றி இருவருமே மாத்தி மாத்தி பேசி சண்டை போட்டுக் கொண்டார்கள். அதற்குப் பின் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசனை செய்தார்கள்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

கடைசியில் மூவரும் ரெடி ஆகி வெளியே கிளம்ப பார்த்தார்கள். உடனே பாண்டியன், எங்கே? என்று கேட்டதற்கு மூவருமே ஒவ்வொரு பதிலை சொல்லி உளறுகிறார்கள். பின் தங்கமயில் வீட்டுக்கு போகிறோம் என்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். பாண்டியனும், அம்மாவை பார்க்க போகும் போது பழம், ஸ்வீட் எல்லாம் வாங்கிக் கொண்டு போ என்று சொன்னவுடன் நிறைய பணம் தருவார் என்று தங்கமயில் எதிர்பார்த்தார். ஆனால், அவர் வெறும் 200 ரூபாய் கொடுத்து அனுப்பி இருந்தார்.

சீரியல் ப்ரோமோ:

இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், மீனா-தங்கமயில்- ராஜி மூவருமே தன்னுடைய மாமனாருக்கு பரிசு வாங்க கடைக்கு செல்கிறார்கள். அப்போது மீனா, தன்னுடைய கணவருக்கு இதுதான் நான் கடைசியாக பேசுவது என்று மெசேஜ் போடுகிறார். இதை பார்த்தவுடன் செந்தில் பயந்து போய் மீனாவை தேடுகிறார். பின் மீனாவின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகி விடுகிறது. கதிர், செந்தில் இருவருமே எங்கெங்கேயோ மீனாவை தேடி அலைகிறார்கள். கடைசியில் மீனா, தான் இருக்கும் இடத்தை சொல்ல செந்தில் பதறியடித்து சென்று என்னை விட்டுப் போய் விடுவாயா? என்று கேட்டதற்கு மீனா எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

Advertisement