விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வீட்டில் தன்னுடைய கணவரின் பிறந்தநாளை குறித்து கோமதி அவரின் தம்பியிடம் பேசி இருந்தார். இதைக் கேட்ட தங்கமயில், மீனா- ராஜி இடம் சொல்லி இருந்தார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், ராஜி- மீனா என்று பெயரை சொன்னவுடன் இருவருமே சந்தோஷப்பட்டு வெளியே வந்தார்கள். பின் வாங்கி தந்த தின்பண்டத்தை பாண்டியன் கொடுத்தார். இதை பார்த்து செந்தில்- கதிர் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.
பின் ரூமில் செந்தில்- மீனா இடையே சண்டை நடக்க, கோபத்தில் மீனா தூங்க வெளியே வந்தார். அப்போது செந்தில், மீனாவை தேடி மொட்டை மாடிக்கு வந்தார். அதை கவனித்த மீனா உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டார். மேலும், கதிர் தாழ்ப்பாள் கூட போடாமல் குளிக்க, அப்போது உள்ளே சென்ற ராஜி, கதிரைப் பார்த்து கத்தி இருந்தார். பின் ரூமில் இதைப்பற்றி இருவருமே மாத்தி மாத்தி பேசி சண்டை போட்டுக் கொண்டார்கள். அதற்குப் பின் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாரின் பிறந்த நாளுக்காக என்ன வாங்கலாம் என்று யோசனை செய்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கடைசியில் மூவரும் ரெடி ஆகி வெளியே கிளம்ப பார்த்தார்கள். உடனே பாண்டியன், எங்கே? என்று கேட்டதற்கு மூவருமே தங்கமயில் வீட்டுக்கு போகிறோம் என்று சொன்னார்கள். உடனே பாண்டியன் செலுவுக்கு 200 ரூபாய் கொடுத்து அனுப்பி இருந்தார். நேற்று எபிசோடில் மீனா, தங்கமயில், ராஜி மூவருமே தன்னுடைய மாமனாருக்கு துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு போனார்கள். அங்கு துணி எல்லாம் எடுத்து விட்டு பில் கொடுக்க மீனா வந்தார்.
நேற்று எபிசோட்:
உடனே ராஜி தடுத்து கொடுக்கப் போனார். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று தங்கமயில் வருத்தப்பட்டார். கடைசியில் மீனா பில் கொடுத்தார். இதற்கிடையில் மீனா, செந்திலுக்கு நிறைய முறை போன் செய்து கொண்டே இருந்தார். ஆனால், செந்தில் கண்டுகொள்ளவிலை. உடனே மீனா, இதுதான் நீங்கள் என்னிடம் பேசுவது கடைசி என்று மெசேஜ் அனுப்பி இருந்தார். இதை பார்த்து செந்தில் அதிர்ச்சி ஆனார். இன்னொரு பக்கம் மூவரும் நல்ல ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்றைய எபிசோட்:
இந்த முறை நான் பில் கொடுக்கிறேன் என்று ராஜி கொடுத்தார். ஆனால், தங்கமயில் பணம் இல்லாததை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மூன்று மருமகள்களும் ஷாப்பிங் முடித்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது மீனா, எனக்கு வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். மற்ற இரண்டு பேர் வீட்டிற்கு வந்தார்கள். வீட்டில் கோமதி, என்ன பை? என்று கேட்டதற்கு ஏதோ சொல்லி ராஜி-தங்கமயில் சமாளிக்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
இதற்கிடையே செந்தில் வீட்டிற்கு சாப்பிட வந்தார். பின் மீனாவை பற்றி விசாரிக்க கோமதி தெரியாது என்று சொல்லிவிடுகிறார். ராஜிக்கு போன் செய்து பார்த்தார். அனால், அவர் எடுக்கவில்லை. இன்னொரு பக்கம் கதிர்-சித்தப்பு இருவரும் பேசி கொண்டு இருக்கும் போது ராஜி நிலைமை பற்றி எடுத்து சொல்லி புரிய வைக்கிறார் சித்தப்பு. அதற்கு பின் செந்தில் நடந்தை கதிரிடம் சொல்லி இருவருமே மீனாவை தேடி போகிறார்கள். எங்கேயும் மீனா இல்லை என்றவுடன் பதட்டத்தில் செந்தில் ரொம்பவே பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.