விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் காந்திமதி, இருவரையும் சேர்த்து வைக்க தான் இந்த திட்டம் போட்டேன். ஆனால் அது சொதப்பிவிட்டது என்று உண்மையை சொன்னார். காந்திமதியின் பிளானை கேட்டு ராஜி- மீனா ஷாக் ஆனார்கள். கோமதி எதுவும் சொல்லவில்லை. இன்னொரு பக்கம் கடையில் பாண்டியன், செந்தில்- கதிர் இருவரும் பேசியதை நினைத்து சரவணன் இடம் புலம்பி கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பழனி, வீட்டிற்கு பாண்டியனை அழைத்தார். பாண்டியன், இனிமேல் நான் அந்த வீட்டிற்கு வர மாட்டேன். எல்லோருமே அவரவர்கள் விருப்பப்படி இருக்கட்டும் என்றார்.

செந்தில், நீ என்னிடம் சொல்லாமல் எதற்காக கோயிலுக்கு போனாய் என்று கேட்டார். மீனா, நான் சொல்லிடு தான் போனேன் என்று வாய்ஸ் மெசேஜ் காண்பித்தார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை. இன்னொரு பக்கம் பழனி, பாண்டியனை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். வீட்டிற்கு வந்தவுடன் பழனிவேல், என் மச்சானுக்காக பேச நான் இருக்கிறேன். என் மச்சான கேள்வி கேட்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்றெல்லாம் கோமதியை வெளுத்து வாங்கினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, உன் வீட்டு பிரச்சனையை உன்னோடு வைத்துக்கொள். என் வீட்டு பிரச்சனையில் தலையிடாதே என்று திட்டி பழனியை அனுப்பி விட்டார். அதற்கு பின்பு பாண்டியன், செந்தில்- கதிரை பார்த்து ரெண்டு பேரும் என்ன பேச்சு பேசினீர்கள்? நான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை ரெண்டு பேருமே எடுத்து வையுங்கள். இரண்டு மாதம் உங்களுக்கு டைம் கொடுக்கிறேன் என்றார். செந்தில், கதிரால் பேசவே முடியவில்லை. கோமதி எதற்காக பணத்தை மீண்டும் கேட்கிறீர்கள் என்றார். பாண்டியன் இது என்னுடைய விஷயம் யாரும் தலையிட வேண்டாம் என்று திட்டி விட்டு ஹோட்டலில் வாங்கி வந்த சாப்பாட்டை சாப்பிட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் கடையிலிருந்து சாப்பாட்டுகளை வாங்கி வந்து சாப்பிடுகிறார். அதோடு கோமதி வெறுப்பேற்றுவதற்காக வீட்டில் உள்ள எல்லோருக்கும் சாப்பிட கொடுக்கிறார். இதை பார்த்து கோமதிக்கு கோபம் அதிகமாகிறது. கதிர், தன்னுடைய அம்மாவை சமாதனம் செய்கிறார். சரவணன் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது அஞ்சலி போன் செய்து சரவணனை கோவிலுக்கு வர சொல்கிறார். சரவணன்-அஞ்சலி இருவரும் கோவிலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது சரவணன் நண்பர் கோயிலுக்கு வருகிறார். நண்பர், நீங்கள் இன்னும் காதலிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்டு பழைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை தங்கமயில் அப்பா பார்த்து ஷாக் ஆகி போட்டோ எடுத்து வைத்துக் கொள்கிறார். மறுபக்கம் குமார் ,தன்னுடைய பாட்டியின் மாத்திரைகளை எல்லாம் அரசி கொடுக்கிறார். அதோடு சாக்லேட்டையும் கொடுக்கிறார். கோபத்தில் அரசி திட்டுகிறார். இருந்தாலும் குமார் கொடுத்த சாக்லேட்டை தூக்கி போட முடியாமல் அரசி அமைதியாக வைத்துக் கொள்கிறார்






