காசுக்காக மோசமாக பேசிய பாண்டியன், அசிங்கப்பட மீனா, வேதனையில் செந்தில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
330
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் பாண்டியன், மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார். மேலும், கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டத்தால் பாண்டியன் ஒத்து கொள்கிறார். ஆனால், கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்க கடைசியில் இருவரும் சண்டை போட்டு, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க ஒத்து கொள்கிறார் பாண்டியன்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போகிறார். பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக லீவு கேட்க சொல்ல எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் கோவப்பட்டு இருந்தார். அதற்குப் பின் ரூமில் ஒவ்வொரு ஜோடியும் ஹனிமூன் பற்றி பேசி மீனா- ராஜு இருவரும், நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை. எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்தி இருந்தார். இதனால் கோமதி வருத்தத்தில் இருக்க எப்படியோ மீனா,ராஜி இருவரும் மாமியாரை சமாதானம் செய்து விடுகிறார்கள்.

சீரியல் கதை:

பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்கிறார். அப்போது, 5000 தான் ஆகும் என்று ஆன்லைன் மூலம் தங்கமயில் ரூம் புக் செய்து இருந்தார். கடந்த வாரம், செந்தில் அரசாங்க வேலைக்கு செல்வது குறித்து மீனா அறிவுரை சொல்ல, செந்தில் அதிர்ச்சியாகி இவ்வளவு இருக்கிறதா? என்று பயந்து போகிறார். பின் இதை படியுங்கள் என்று மீனா ஒரு புத்தகம் கொடுத்தார். ஆனால், செந்தில் தூங்கி விட்டார். இன்னொரு பக்கம் சரவணன், உண்மையிலேயே ரூம் உடைய செலவு 5000 தானா? இதற்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாது என்று சொல்லி தூங்கி விட்டார்.

-விளம்பரம்-

கடந்த வாரம் எபிசோட்:

அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 15000 கட்ட வேண்டும் என்று தங்க மயிலுக்கு மெசேஜ் வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியான தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் கால் செய்து நடந்ததை சொல்ல, அவர் சென்னைக்கு போன பிறகு சொல்லு என்கிறார். ஆனால், தங்கமயில் பொய் மேல் பொய் சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்று பயப்படுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், செந்தில், அரசாங்க வேலைக்கு போவது குறித்து மீனா, கதிர், ராஜி மூவருமே பேசுகிறார்கள். செந்தில் எதுவும் சொல்லாமல் சமாளிக்கிறார்.

இன்றைய எபிசோட்:

பின் வீட்டில் பாண்டியன் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது செய்தித்தாள் யாருமே படிப்பதில்லை. அதற்கு வேற தண்ட செலவு கட்டணும் என்று சொல்கிறார். அந்த சமயம் பார்த்து மீனா, இங்கிலீஷ் நியூஸ் பேப்பர் போட சொல்லுங்கள். அதில் தான் வேலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் வரும் என்றதற்கு ராஜி, எனக்கு உதவியாக இருக்கும் என்று சொல்கிறார். உடனே பாண்டியன், இது ஒரு தண்ட செலவா? என்று மனது கஷ்டப்படும் அளவிற்கு பேச, அதற்கு பணத்தை நான் கொடுத்து விடுகிறேன் என்று மீனா சொல்கிறார். இதனால் பாண்டியன்-மீனாவுக்கு வாக்குவாதம் வர மீனா எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். இது எல்லாம் பார்த்த செந்தில் ரொம்பவே வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Advertisement