விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைத்தார். பின் எல்லோரும் சரவணனை சமாதானம் செய்தார். பின் சரவணன், அவளை பற்றி உண்மையை சொன்னால் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று கொந்தளித்தார். சரவணன், தன்னுடைய அப்பாவை கட்டிப்பிடித்து ரொம்ப எமோஷனலாக அழுதார். இது எல்லாம் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே தவித்தார்கள்.

சரவணன், இவள் டிகிரி எல்லாம் படிக்கவில்லை. வெறும் 12வது தான் படித்திருந்தார். இவள் மட்டுமில்லை இவருடைய மொத்த குடும்பமே நம்மை பொய் சொல்லி ஏமாற்றி இருந்தார்கள். இவர் படிக்காததனால் தான் டீச்சர் வேலை வேண்டாம் என்று சொல்லி பொய் சொல்லி ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்யப் போனார். இப்படி இவள் வாயை திறந்து சொன்னது எல்லாமே பொய் தான் என்றார். இதை எல்லாம் கேட்டு கோமதிக்கு தலைமேல் இடி விழுந்தது போல இருக்கிறது. கோமதி அதிர்ச்சியில் மயங்கி கீழே விழுந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே சரவணன், இதற்கே விழுந்துட்டால் என்னம்மா, இவளைப் பற்றி இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கிறது. இவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. பாண்டியனுக்கு கோபமும் அதிகமானது. தங்க மயிலால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டே இருந்தார். சரவணன் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், நடந்ததை நினைத்து ரூமுக்குள் அழுது கொண்டிருக்கிறார். அப்போது வந்த ராஜியிடம், தங்கமயில் தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். அப்போது கோமதி, உன்னை மாதிரி ஒரு மோசக்காரியை நான் பார்த்ததே இல்லை. என் பிள்ளைகளுக்கு என்று ஒரு பிரச்சனை என்றால் நான் சும்மா விடமாட்டேன். நீ இவ்வளவு கேடுகெட்டவள்ளா? என்று தங்கமயிலை ரொம்ப மோசமாக பேசி திட்டி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
தங்கமயில் மேதனையில் இருக்கிறார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே தூங்கி விடுகிறார்கள். பாண்டியன், சரவணன் நிலைமையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். கோமதியும் ஆறுதல் சொல்கிறார். இருந்தாலுமே பாண்டியன், சரவணன் நினைத்து ரொம்ப கஷ்டப்படுகிறார். காலை பொழுது விடியட்டும். எதுவாக இருந்தாலும் பேசி முடிவெடுக்கலாம் என்று கோமதி சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






