மீண்டும் ஆன்லைன் புக்கிங்கில் சொதப்பிய தங்கமயில், பாண்டியனுக்கு தெரிய வருமா? விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
290
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார் பாண்டியன். தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார்.

-விளம்பரம்-

இன்னொரு பக்கம், கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார். மேலும், கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டத்தால் பாண்டியன் ஒத்து கொள்கிறார். ஆனால், கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்கிறார். கடைசியில் இருவரும் சண்டை போட்டு, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க ஒத்து கொள்கிறார் பாண்டியன்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதை எல்லாம் எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா பார்த்து, நான் சாவதற்குள் என் மகளிடம் பேச வேண்டும். அதற்கு முடியாதா? என்று புலம்பி அழுதார். இதை பார்த்த அவர் மகன்கள் கோபமாக திட்டி பேசி இருந்தார்கள். இதையெல்லாம் அறிந்த பாண்டியன், கோமதி கவலைப்படுகிறார்கள். பின் ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் பொய் சொல்லி போகிறார். இந்த வாரம் பாண்டியன், மூணு ஜோடியையும் ஹனிமூன் போக லீவு கேட்க சொல்ல எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், தங்கமயில் மட்டும் கோவப்பட்டு நிற்கிறார்.

சீரியல் கதை:

அதற்குப் பின் ரூமில் ஒவ்வொரு ஜோடியும் ஹனிமூன் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள். மீனா, ராஜு இருவரும் நாங்கள் ஹனிமூனுக்கு போகவில்லை, எங்களுக்கு லீவு இல்லை என்று சொன்னதும் பாண்டியன் கோபப்பட்டு கோமதி இடம் கத்துகிறார். இதனால் கோமதி வருத்தத்தில் இருக்கிறார். ஆனால், எப்படியோ மீனா, ராஜி இருவரும் மாமியாரை சமாதானம் செய்து விடுகிறார்கள். பின் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை பாண்டியன் செய்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ராஜி- கதிர் இருவருமே தங்களுடைய அப்பத்தாவை நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இன்றைய எபிசோட்:

இன்னொரு பக்கம், செந்தில் அரசாங்க வேலைக்கு செல்வது குறித்து மீனா அறிவுரை சொல்லி இருக்கின்றார். அதை எல்லாம் கேட்டு செந்தில் இவ்வளவு இருக்கிறதா? என்று பயந்து போகிறார். இதையெல்லாம் படியுங்கள் என்று மீனா ஒரு புத்தகம் கொடுக்கிறார். ஆனால், செந்தில் தூங்கி விடுகிறார். இன்னொரு பக்கம் தங்கமயில் ஹனிமூன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். அப்போது சரவணன், உண்மையிலேயே ரூம் உடைய செலவு 5000 தானா? இதற்கு மேல் அப்பாவுக்கு செலவு வைக்கக்கூடாது என்று சொல்லி தூங்கி விடுகிறார்.

சீரியல் ட்ராக்:

அந்த சமயம் பார்த்து, அட்வான்ஸ் தொகை தான் 5000, மீதி 15000 கட்ட வேண்டும் என்று தங்க மயிலுக்கு மெசேஜ் வந்திருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சியான தங்கமயில் தன்னுடைய அம்மாவிடம் கால் செய்து நடந்ததை சொல்கிறார். அதற்கு அவர் அம்மா, பரவாயில்லை. சென்னைக்கு போன பிறகு சொல்லு என்கிறார். ஆனால், தங்கமயில் பொய் மேல் பொய் சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்று பயப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் ஹோட்டல் ரூம் விஷயத்தில் தங்கமயில் மாட்டிக் கொள்வாரா? பாண்டியன் என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது

Advertisement