விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். தெலுங்கில் வடிநம்மா என்ற பெயரிலும், கன்னடத்தில் வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ் எனவும் இந்தியாவில் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவதும் குறிப்பிடத்தக்கது. சீரியலையும் தாண்டி இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்கள் நிஜத்திலும் ஒரு கும்பமாக தான் இருந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : அந்த படம் பிளாப் ஆனதும் நான் தான அந்நியன் வாய்ப்பு கொடுத்தேன், எப்போ எனக்கே விபூதியா ? (கருட புராணத்தில் இதுக்கு என்ன தண்டனை )

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் குமரன், வெங்கட், சரவணன் ஆகியோர் கர்ணன் படத்தை பார்க்க சென்றுள்ளார்கள். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார்.கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் செய்தது.

Advertisement
Advertisement