அந்த படம் பிளாப் ஆனதும் நான் தான அந்நியன் வாய்ப்பு கொடுத்தேன், இப்போ எனக்கே விபூதியா ? (கருட புராணத்தில் இதுக்கு என்ன தண்டனை )

0
51896
shankar

அந்நியன் படத்தை இந்தியில் இயக்குவதில் இயக்குனர் ஷங்கருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரமுடன் ‘அந்நியன், ஐ’ என இரண்டு மெகா ஹிட் படங்களுக்காக கூட்டணி அமைத்திருந்தார். இதில் ‘அந்நியன்’ திரைப்படம் தான் இவர்களது காம்போவில் வெளி வந்த முதல் திரைப்படம். இந்த படத்தில் ‘சீயான்’ விக்ரம் ‘அம்பி – ரெமோ – அந்நியன்’ என மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் வலம் வந்திருந்தார்.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 2005-ஆம் ஆண்டு வெளி வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இந்தியில் ரீ -மேக் செய்ய உள்ளதாக சமீப காலமாக கூறப்பட்டு வந்தது. மேலும், இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் அதிகரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார் ஷங்கர்.

இதையும் பாருங்க : எப்போவ், கர்ணா – ஊர் மக்களாக நடித்தவர்களுக்கு கூட உயிரை கொடுத்து சொல்லி கொடுத்துள்ள மாரி செல்வராஜ். வீடியோ இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் அந்நியன் படத்தின் உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் ரீமேக் செய்வதற்குரிய முறையான அனுமதியை தன்னிடம் பெறாமல் ஷங்கர் இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது, அந்நியன் இந்தி ரீமேக் செய்யப்படுவதாக வெளியான தகவல் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம் தான் முழு உரிமை இருக்கிறது.

ரீமேக் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் அனுமதி பெற்று தான் செய்ய வேண்டும். அனுமதி பெறாமல் ரீமேக் செய்தால் அது சட்டப்படி குற்றம். பாய்ஸ் படம் தோல்வியடைந்து உங்கள் இமேஜூக்கு பாதிப்பு வந்தபோது நான் தான் அந்நியன் பட வாய்ப்பை உங்களுக்கு கொடுத்து பழைய நிலைக்கு கொண்டு வந்தேன். ஆனால் இப்போது நீங்கள் என்னை தவிர்த்துவிட்டு அந்நியனை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக அறிவித்திருப்பது உங்களது கீழ்த்தரமான மனநிலையை காட்டுகிறது.” என்று ஆஸ்கார் ரவிச்சந்திரன்ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். அந்நியன் படத்துல கருட புராணத்துல என்னென்னவோ தண்டனை காமிச்சாங்க, இப்போ அனுமதி பெறாமல் சங்கர் படம் எடுக்கறதுக்கு என்ன தண்டையோ தெரியல.

-விளம்பரம்-
Advertisement