அன்று வைஷாலி, இன்று தீபிகா – மூன்றாவது முறையாக மாற்றப்படும் ஐஸ்வர்யா கதாபாத்திரம் ?

0
2428
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா அறிவுமணி, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Watch Pandian Stores Full Episode 481 Online in HD on Hotstar CA
வைஷாலி தணிகா

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

- Advertisement -

இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் வைஷாலி தனிகா நடித்து வந்தார். அதன் பின்னர் சத்யா சாய் என்பவருடன் சில நாட்கள் கண்ணனுடன் ரொமான்ஸ் காட்சிகள் சென்று கொண்டு இருந்தது.

இப்படி ஒரு நிலையில் வைஷாலிக்கு பின் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தீபா மாற்றப்பட்டார். இப்படி ஒரு நிலையில் தீபிகாவும் மாற்றப்பட்டு தற்போது அவருக்கு பதிலாக  ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த சாய் காயத்ரி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக கண்ணன் – ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை வைத்து நகர்ந்து வரும் நிலையில் முக்கிய கதாபாத்திரமான ஐஸ்வர்யா மாற்றப்பட்டால் சீரியலின் போக்கு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement