மணிமேகலையால் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸை மிஞ்சிட்டோம். புகழ்ந்து தள்ளிய விஜய் டிவி சீரியல் குழுவினர்.

0
66149
manimegalai
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருபவர் அண்ணன், தம்பி நால்வரின் பாசத்தை மையமாக கொண்ட தொடர். பாண்டியன் ஸ்டோர் சீரியலை சிவசேகர் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், ராஜ்குமார், என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
Image result for manimegalai in bharathi Kannamma

- Advertisement -

இந்நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை முந்தியதாக பாரதி கண்ணம்மா பட குழுவினர் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறி உள்ளார்கள். விஜய் டிவியில் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி ஒளிபரப்பானது “பாரதி கண்ணம்மா” சீரியல். இந்த சீரியல் காதல், பாசம், குடும்பம் என கலவை தொடராக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த பாரதி கண்ணம்மா சீரியல் மலையாள மொழியில் “கருத்த முத்து” என்ற தொடரின் தழுவல். இந்நிலையில் பேட்டியில் பாரதி கண்ணம்மா குழுவினர் கூறியிருப்பது, இந்த சீரியலில் மணிமேகலை நடித்து இருக்காங்க. முதலில் அவங்க வெண்பா கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால்,மணிமேகலை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதில் தான் அதிகம் கவனம் செலுத்தி இருக்கிறேன்.

சீரியல் இப்ப வர ஐடியா இல்லை. எனக்கு பயமா இருக்கு என்று சொல்லிட்டாங்க. அதற்கு பிறகு இந்த கதையில ஹீரோவோட அம்மா சௌந்தர்யா ரொம்ப ஸ்ட்ராங்கான லேடி. அவங்களை எதிர்க்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தைரியமாக பேசுற மாதிரி ஒரு நடிகை வேண்டும். பின்னர் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க மணிமேகலை இடம் கேட்டு பார்த்தோம். கேட்டவுடனே மணிமேகலை சூட்டிங் எப்ப வரட்டும் என்று சொல்லிட்டாங்க. அவங்க நடித்த அந்த எபிசோட் வேற லெவல். எப்போவுமே சோசியல் மீடியாவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ தான் முதல் இடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-

வீடியோவில் 4 :50 நிமிடத்தில் பார்க்கவும்

ஆனால், மணிமேகலை வந்த எபிசோட் ப்ரோமோ பயங்கர மக்கள் மத்தியில் ரீச் ஆச்சி. மணிமேகலை மூலம் தான் அந்த எபிசோட் நல்லா போனது என்று கூறினார். சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவான நபர்களில் ஒருவர் மணிமேகலை. அதுமட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பங்குபெற்று இருந்தார்.

Advertisement