சின்னத்திரை நயன்தாரா,வாணி போஜன்னு தெரியும். சின்னத்திரை திரிஷா இவங்க தானாம்.

0
82431
Trisha
- Advertisement -

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம்.  ஒருகாலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்த எத்தனையோ நடிகர் நடிகைகள் தற்போது சின்னத்திரையில் இருந்து வருகிறார்கள் அதேபோல சின்னத்திரை நடிகர்கள் பலரும் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு தான் படம் இருக்கும் ஆனால், விஜயசாந்திக்கு பின்னர் ஒரு கதாநாயகிக்கு பட்ட பெயர் வைக்கப்பட்டது என்றால் அது நயன்தாராவிற்கு தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நயன்தாராவிற்கு லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டமும்இருக்கிறது . ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குசமீபத்தில் நுழைந்துள்ள வாணி போஜன் தான் சின்னத்திரை நயன்தாரா என்று அவரது ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் நடிகை வாணி போஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு ‘நான் தான் சின்னத்திரை நயன்தாரா டா’ என்று பதிவிட்டிருந்தார். ஆனால், பின்னர் ரசிகர்கள் கேலி செய்ய அவசர அவசரமாக அந்த பதிவை நீக்கிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சின்னத்திரை திரிஷா என்று தற்போது அழைக்கப்படும் வருவது வேறு யாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் சித்ரா தான்.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ராவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். சமீபத்தில் சித்ரா தனது ரகசிய ரசிகையயான முல்லை அடிக்ட் ரசிகையுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதற்கு பல விதமான கருத்துக்கள் வந்தது. அதில் ஒரு ஐடி சின்னத்திரை திரிஷா சித்து விஜே என்ற ஒரு ஐடியும் அடக்கும். சின்னத்திரை திரிஷா என்று குறிப்பிட்டு சித்திரா பதிவிட்டு வரும் அனைத்து புகைப்படங்களையும் இந்த பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement