போலீஸ் கிட்ட சொல்லாதடா - சித்ரா இறந்த பின் நண்பரிடம் பேசியுள்ள ஹேம்நாத் - ஷாக்கிங் ஆடியோ.

By Rajkumar · 19/1/2021

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.இந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் ஹேம்நாத் மீது வழக்கு பதிவு செய்து ஹேம்நாத்தை கைது செய்தனர். இப்படி ஒரு நிலையில் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் முன்பாக ஹேம்நாத்திற்கும் சித்ராவிற்கும் சண்டை வந்ததாகவும், சித்ராவை ஹேம்நாத் யாருடன் ஆட்டம் போட்டு வந்த என்று சண்டையிட்டதாகவும் அதற்கு சித்ரா, நீ இல்லனா வாழ முடியாது என்று கூற செத்து தொல என்று ஹேம்நாத் கோபமாக அறையை விட்டு வந்த நேரத்தில் தான் சித்ரா தூக்கு போட்டு கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியது.

இதையும் பாருங்க : சனம் ஷெட்டியின் அட்ஜெஸ்மென்ட் விவகாரம் - வெளியில் வந்ததும் சிக்கலில் சிக்கிய பாலாஜி.

மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஹேம்நாத்திற்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று ஹேம்நாத்தின் 10 வருட நெருங்கிய நண்பரான சையது ரோஹித் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். தன்னை பெரிய தொழிலதிபர் போல், அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நெருக்கமானவர் எனக் காட்டிக் கொண்டு பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=qrprwy-t4rg&feature=youtu.be

மேலும், பல முறை எச்சரித்தும் கேட்காததால் அவரிடம் இருந்து விலகியிருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், சித்ரா இறந்த பின்னர் ஹேம்நாத் பேசிய ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் தற்கொலை செய்துகொண்ட போது தனக்கும் சித்ராவிற்கும் என்ன நடந்தது என்பதை ஹேம்நாத்தே கூறியுள்ளார். அந்த அழைப்பில் அவரது நண்பருடன் பேசியுள்ள ஹேம்நாத், இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full