சனம் ஷெட்டியின் அட்ஜெஸ்மென்ட் விவகாரம் – வெளியில் வந்ததும் சிக்கலில் சிக்கிய பாலாஜி.

0
44301
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார். அதிலும் ஒரு எபிசோடில், பாலாஜி, சனம் ஷெட்டியை அட்ஜெஸ்ட்மண்ட் என்ற வார்த்தையை குறிப்பிட்டு அவதூறாக பேசி இருந்தார் என்று சர்ச்சை எழுந்தது. அதே போல ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியது, மைக்கை தூக்கி போட்டு உடைத்து என்று பல சர்ச்சைகளில் சிக்கிய பாலாஜி ரெட் கார்ட் கொடுத்து வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பலர் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 10ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் பேசிக்கொண்டிருக்கையில் பாலாஜி முருகதாஸ் நான் ஒரு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சவுத் இந்தியா என்ற பெயரில் pageant ஒன்றை நடத்தினேன் என்று கூறினார் அதற்கு சனம் செட்டி எப்போது என்று கேட்டதற்கு பாலாஜி முருகதாஸ் இது உங்களுடையது மாதிரி டுபாக்கூர் கிடையாது என்று கூறினார். உங்களுடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் யாரும் இன்டர்நேஷனல் லெவலுக்கு செல்ல முடியாது என்று பாலாஜி முருகதாஸ் கூறினார். அதற்கு சனம் செட்டி ஏன் முடியாது என்று கேட்டார். பின்னர் இந்த பிரச்சனையை விட்டு விட்டு பாலாஜி முருகதாஸ் தன்னுடைய சாதனைகளைப் பற்றி கூறி வந்தார்.

இந்த பிரச்சனை குறித்து பாலாஜி குறிப்பிட்ட அந்த beauty pageant நிறுவனத்தில் ஓனர் ஜோ மைக்கேல் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அதில், பாலாஜி முருகதாஸ், பேசணும்னு பேசி இருக்கார். அவர் பேசியதற்கு அவர் பதில் சொல்லி ஆகணும் இல்லை மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்கள் சார்பில் ஒரு சட்ட நோட்டீஸ் எங்கள் வக்கீல் மூலமாக வழங்கப்படும். அவர் டுபாகூர் என்று சொல்லி இருக்கார். அவர் டுபாகூர் என்று சொன்ன அந்த நிறுவனம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஒரு pageant நிறுவனம். மேலும், பாலாஜி முருகதாஸ் பங்கேற்ற ஒரே தேசிய pageant என்றால் அது femina நடத்திய Mr.india pageant தான். அதில் கூட இவர் வின்னர் கிடையாது. இவர் பிக் பாஸில் பேசிய போது நான் ஒரு pageant  நிகழ்ச்சியை நடத்தினேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
joe

ஆனால், அவர் சொன்னது போல mr&mrs சவுத் இந்தியா கிடையாது. அவர் நடத்தியது Mr&Mrs இந்துஸ்தான், அதுவும் அவர் ஓனர் கிடையாது என்று கூறியிருந்தார். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலாஜி, சனம் ஷெட்டியை Udjustment And Compramise என்ற வார்த்தையை பயன்படுத்தி திட்டியதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இது ட்வீட் செய்து இருந்த ஜோ மைக்கேல். பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் என்று சொன்னதற்கான காரணம் தற்போது நிரூபணமாகியுள்ளது ஏற்கனவே டுவிட்டரில் கதறும் அந்த மூன்றாம் நபர் (மீரா மிதுன்)பற்றி கவலை இல்லை. நாங்கள் இதை சட்டரீதியாக எதிர்கொள்ள இருக்கிறோம். சட்டரீதியாக இந்த வீடியோவின் எடிட் செய்யப்படாத பதிவை நாங்கள் பெறுவோம் என்று கூறியிருந்தார்.

மேலும், பாலாஜி மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஒன்று கூறி இருந்த ஜோ மைக்கேல் தற்போது அதனை செய்துள்ளார். அதாவது தன்னுடைய நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் குறித்து தவறாக பேசியதோடு, தன்னுடைய நிறுவனம் ஒரு டுபாக்கூர் நிறுவனம் என்று கூறியது தனக்கு மன உளச்சலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஜோ மைக்கேல் பாலாஜி பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் நீதிமன்றத்தில் ஒரு கோடி கேட்டு பாலாஜி மீது வழக்கு தாக்கல் செய்ய போவதாக கூறி வக்கீல் நோட்டீசை அனுப்பியுள்ளார். மேலும், பாலாஜிக்கு அதனை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ள ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ள ஜோ மைக்கேல்,

Advertisement