மதுப்பழக்கம் மட்டுமல்ல சித்ராவிற்க்கு இந்த மோசமான பழக்கமும் இருந்ததா ? ஹேண்ட் பேக்கில் சிக்கிய பொருள்.

0
2736
chitra

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

chitra

அதே போல சித்ராவின் உடலில் இருந்த ரத்த காயங்களை பார்த்து பலருக்கும் சந்தேகம் எழுந்தது. இதனால் ஹேம்நாத் தான் சித்ராவை கொலைசெய்து இருப்பார் என்றும் சர்ச்சை எழுந்தது. அதே போல சித்ராவின் தாயாரும், என் மகளை அவன் தான் அடித்தே கொன்று விட்டான் என்றும் கதறி இருந்தார். ஆனால், சித்ராவின் பிரேதபரிசோதனை முடிவின்படி சித்ராவின் மரணம் தற்கொலை தான் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால். சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது தாயார் மற்றும் அவரது கணவர் கொடுத்த மன அழுத்தமே காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையும் பாருங்க : நாடோடிகள் படத்தில் வந்த இந்த நடிகையை நினைவிருக்கா ? சாத்தியமா நம்ப முடியாடா சாமி.

- Advertisement -

சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் நடைபெற்ற விசாரணையில் அவர் தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே சித்ராவிற்கு மதுப்பழக்கம் இருந்ததாக ஹேம்நாத்தின் தந்தையும், சீரியல் நடிகையான ரேகா நாயரும் கூறி இருந்தனர். இப்படி ஒரு நிலையில் சித்ராவிற்கு போதை தரக்கூடிய கஞ்சாவை உபயோகிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது சித்ரா இறந்த பின்னர் அவரது ஹேண்ட் பேக்கை பரிசோதித்த போலீசார் அதிலிருந்து 150 கிராம் கஞ்சா அவையும் அந்த கஞ்சாவுடன் கஞ்சா லோட் செய்யப்பட்ட சிகரெட் ஒன்றையும் கண்டு அதிர்ந்து போய்யுள்ளார்களாம்.

ஏற்கனவே, சித்ராவுக்கு மதுப்பழக்கம் உண்டு. அவரும் அவரது கணவர் ஹேமந்த்தும் ஒன்றாக மது குடிப்பார்கள் என ஹேமந்த்தின் தந்தை சென்னை மாநகர கமிஷனருக்கு எழுதிய புகாரில் தெரிவித்திருந்தார். மதுப்பழக்கம் உள்ள சித்ராவின் கஞ்சா பழக்கம், அவரது உறவினர்களுக்குத் தெரியுமா, சித்ராவுக்கு கஞ்சா சப்ளை செய்யும் நபர் யார் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்த போது, சித்ராவின் உறவினர்கள் யாருக்கும் அவரது கஞ்சா பழக்கம் பற்றி தெரிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது

-விளம்பரம்-
Advertisement