திரும்ப வருவோம் – பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவுடன் சித்ரா சொன்ன கிறிஸ்துமஸ் வாழ்த்து – ரசிகர்களை உருக்கிய வீடியோ.

0
1819
chitra
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

-விளம்பரம்-

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

- Advertisement -

சமீபத்தில் கூட சரண்யா, முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. ஆனால், அதை மறுத்து சரண்யா தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்தும் இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் புதிய முல்லையாக காவியா வந்தாலும் பழைய முறையான சித்ராவை ரசிகர்கள் இண்ணமும் மிஸ் செய்துதான் வருகிறார்கள்

சித்ரா இறந்தபின்னர் அவர் தொடர்பான பல்வேறு புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவுடன் இணைந்து நடிகை சித்ரா கிறிஸ்துமஸ் வாழ்த்து சொன்ன வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது அந்த வீடியோவில் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லிவிட்டு இறுதியில் திரும்ப வருவோம் என்று சித்ரா கூறியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை சொல்ல சித்ரா உடன் இல்லை என்பது ரசிகர்களின் வேதனை.

-விளம்பரம்-
Advertisement