அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ணனும்ன்னு நெனச்சாங்க அதான் பண்ணிட்டேன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா.

0
78728
mullai
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், ஹேமா விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்நிலையில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம். மேலும், இந்த சீரியல் இந்த அளவுக்கு வெற்றிக்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர். சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பையும் , அன்பையும் பெற்று வருகிறார்.

-விளம்பரம்-

நடிகை சித்ரா அவர்கள் விஜேவாக தான் அறிமுகமானார். பின் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார். பின்னர் படிப்படியாக பல சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

சீரியல் நடிகையாக இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை சித்ரா. அதோடு சினிமா படங்களிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. தற்போது விஜய் டிவியில் வசூல் வேட்டை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ”முல்லை சித்ரா” என்ற குரூப் ஒன்றை ஓபன் செய்து ரசிகர்கள் சித்ரா குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் சித்ரா, ரசிங்கர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் திருமண வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் சித்ரா. மேலும், அந்த பதவிவில் அம்மாவும் அப்பாவும் கல்யாணம் பண்ணனும்ன்னு நெனச்சாங்க அதான் பண்ணிட்டேன் எனக்கு இல்ல, அம்மாவுக்கு அப்பாவுக்கும் என்று பதிவிட்டுள்ளார் சித்ரா. அதாவது தனது தாய் தந்தையருக்கு 60 ஆம் திருமணம் நடந்ததை தான் சித்ரா அப்படி குறிப்பிட்டுள்ளார். இதனால் சித்ராவின் தாய் தந்தையருக்கு சித்ராவின் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Advertisement