அட, படிக்காதவன் பட குட்டி ரஜினி இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் அண்ணன் தானா ? யார் பாருங்க.

0
217
pandian
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அண்ணன் மிக பெரிய நடிகர் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியலாக திகழ்கிறது. தற்போது சீரியலில் கதிர்- முல்லை இருவரும் சேர்ந்து ஹோட்டல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என்று இருக்கிறார்கள். ஐஸ்வர்யா புதியதாக பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வருகிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இன்னொரு பக்கம், மூர்த்தியின் அம்மா கனவில் வந்து வீட்டை மாற்றுங்கள் என்று சொல்கிறார். வீட்டை விற்க்கும் முயற்சியில் மூர்த்தியின் குடும்பம் இருக்கிறது. இதனால் இதை மீனாவின் அப்பாவே வாங்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் செல்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் அண்ணன் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சுஜிதா குறித்த தகவல்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் சுஜிதா. இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் கலக்கியிருக்கிறார். அதற்குப் பிறகு இவர் துணை கதாபாத்திரங்களில் படங்களில் நடித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பின் சினிமா வரவேற்பு குறைந்து உடன் இவர் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். தற்போது இவர் சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சுஜிதா அண்ணன் குறித்த தகவல்:

சுஜிதாவின் அண்ணனும் மிகப்பெரிய நடிகர் தானாம். சுஜிதா அண்ணன் பெயர் சுப்பிரமணி ராதா சுரேஷ். ஆனால், இவரை எல்லோரும் சூரிய கிரண் என்று தான் அழைக்கிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற பல சூப்பர் ஸ்டார் நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். ஆனால், இவருக்கு நடிகராவதை விட இயக்குனர் ஆவதில் தான் அதிக ஆர்வம்.

சூரிய கிரண் குறித்த தகவல்:

அதன் பின் இவர் இயக்கம் பக்கம் சென்று விட்டார். தெலுங்கில் இவர் இயக்கிய படம் சூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதற்குப் பின் இவர் இயக்கிய சில படங்கள் தோல்வி அடைந்திருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருந்தார். ஆனால், இவர் தான் தனம் சுஜிதாவின் அண்ணன் என்பது பலரும் அறிந்திறாத விஷயம். அது மட்டுமில்லாமல் இவர் நடிகை காவேரியின் முன்னாள் கணவரும் ஆவர். இப்படி சுஜிதாவும் அவருடைய அண்ணனும் கிட்டத்தட்ட மீடியாவிற்குள் நுழைந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது இவர்களுடைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement