ப்பா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதாவா இது. இளம் வயதில் இப்படி ஒரு மாடர்ன் உடையில் பார்த்துள்ளீர்களா ?

0
4353
sujitha
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்,தம்பிகளின் பாச கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோஸ் சீரியலில் தனம்(அண்ணி) என்ற கதாபத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்த சீரியலை தெலுங்கில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதோடு தெலுங்கிலும் இவர் தான் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகை சுஜிதா அவர்கள் தனது சிறு வயதில் இருந்தே சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தற்போது சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது என்றே சொல்லலாம். நடிகை சுஜித்தா அவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 12 ஆம் தேதி 1983 இல் பிறந்தார்.

- Advertisement -

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் டிவியில் 30 சீரியலுக்கு மேல் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகை சுஜிதா அவர்கள் தன்னுடைய இளம் வயதில் சீரியல்களில் நடிக்கும் போது அவர் மாடன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

தற்போது சுஜிதாவின் அந்த மாடர்ன் ஆடை புகைப்படம் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போய் உள்ளார்கள். குடும்ப குத்து விளக்காக பார்த்த சுஜிதாவை மாடன் உடையில் பார்க்கும் போது ரசிகர்கள் அனைவரும் வியந்து போய் உள்ளார்கள். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement