திருமணத்தை முடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முன்னாள் நடிகை. அவரே வெளியிட்ட திருமண புகைப்படம் இதோ.

0
1227
vaishali
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வைஷாலி தணிகா.

-விளம்பரம்-

இந்த நிலையில் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். சமீபத்தில் வைஷாலி தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண ஷாப்பிங் என்று கேப்ஷனை போட்டு ஆணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு இருந்தார். இதனால் இவர் தான் வைஷாலியை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரா என்று ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

ராஜா ராணி சீரியலில் கதாநாயகனுக்கு தங்கையாக நடித்த போதே இவர் ஒருவரை காதலிக்கிறார் என்றும் அவரை தான் விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் அவரை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. அவருடைய பெயர் சத்யா தேவ், கடந்த சில வருடங்களாகவே நண்பர்களாக பழகி வந்துள்ள இவர்கள் இருவரும் காதலித்து வந்திருக்கிறார்கள்.

மேலும் தங்கள் காதலை இரு வீட்டாருக்கும் தெரிவித்து சம்மதம் வாங்கியிருக்கிறார்கள் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு நிச்சயதார்தம் முடிந்த நிலையில் சமீபத்தில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. வைஷாலி திருமணம் செய்துகொண்ட சத்யா தேவ் சத்யா சென்னையில் காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் MSN திருமண மண்டபத்தின் ஓனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement