சோபா சிபாரிசால் வீட்டுக்கு அழைத்து பட வாய்ப்பு கொடுத்த விஜய்யின் தந்தை – ஆனால், இப்போ அதன் நிலைமை.

0
2465
venkat
- Advertisement -

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார்,காவ்யா , குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது. அதோடு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட்டிற்கு விஜய்யின் தந்தை மூலம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் பழனியில் தான். இவர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். அதன் பிறகு சீரியல் நடிகர் ஆனார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் முதன் முதலாக நடிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரை விஜய்யின் தந்தை மற்றும் அம்மா ஷோபா நேரில் வரவழைத்து சந்தித்து இருந்தனர்.

மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் புதிய படத்துக்கு நடிகரைத் தேடிக் கொண்டிருக்கையில் ஷோபா மேம் தான் என்னை பரிந்துரை செய்தார். அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்தும் கொரோனா ஊரடங்குக்கு முன்னால் நடந்திருக்க வேண்டியது.ஆனால் இந்த கொரோனா வந்து மாற்றி விட்டது என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, கொரோனாவிற்கு பின் எந்த அப்டேட்டும் வரல, எது என்னவோ நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement