பாண்டியன் ஸ்டோர்ஸில் இணைந்த ஜீ தமிழ் டிவி பிரபலம் – கண்ணனும் இனி சிங்கிள் இல்லை.

0
2300
kannan
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. ஒரு சாதாரண குடும்பக் கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும், பாராட்டும் பெற்று வருகிறது.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CFbVUb4BsvN/

மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல்.இந்த சீரியலில் இரண்டாவது தம்பிக்கு ஜோடியாக வருபவர் தான் முல்லை. கதிர்– முல்லை இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல். இந்த சீரியல் இந்த அளவுக்கு ஹிட் ஆனதற்கு காரணமானவர்களுள் இவர்களும் ஒருவர்.

- Advertisement -

அதே போல இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் ரங்கநாதன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியலில் அனைவருக்கும் ஜோடி இருக்கிறார்கள். ஆனால், கடைக்குட்டி இருந்து வரும் கண்ணனுக்கு எந்த ஜோடியும் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அவருக்கும் ஜோடியை ஏற்பாடு செய்தவிட்டனர்.

நேற்று (செப்டம்பர் 21) ஒளிபரப்பான எபிசோடில் கண்ணாக நடித்து வரும் சரவணவிக்ரமிற்கு ஜோடியாக  சத்யசாய் கிருஷ்ணாவை களமிறக்கி இருந்தனர்.  சத்யசாய் கிருஷ்ணா வேறு யாரும் இல்லை அழகிய தமிழ் மகள்,ராஜா மகள் உள்ளிட்ட தொடர்களில் நடித்து வந்த சத்யசாய் கிருஷ்ணா.

-விளம்பரம்-
Advertisement