பாண்டியன் ஸ்டோர்ஸில் குடும்ப குத்து விளக்காக இருந்த காவியாவா இது? லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.

0
190
- Advertisement -

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் சீரியலில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஒன்று. ஒரு சாதாரண குடும்பக்கதையை மையமாகக் கொண்ட தொடர். இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை.

-விளம்பரம்-

இந்த சீரியல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.
அதோடு இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியலில் பலர் நடித்து வந்தாலும் கதிர் – முல்லை கதாபாத்திரம் தான் இந்த நிகழ்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இதில் முல்லையாக நடித்து வந்தவர் விஜே சித்ரா.

- Advertisement -

காவ்யாநடித்த சீரியல்கள்:

இவர் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து அவருக்கு பதிலாக காவ்யா நடித்துவந்தார். காவ்யா அவர்கள் பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் கதாநாயகனின் தங்கையாக நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கதாபாத்திரம் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம்உருவானது. அது மட்டுமல்லாமல் இவருக்கு தளபதி நடிப்பில் வெளியாகி இருந்த பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது.

சீரியலில் இருந்து விலகிய காவ்யா :

ஆனால், சில காரணங்களால் பிகில் படத்தின் வாய்ப்பை தவறவிட்டேன் என்று காவ்யா தெரிவித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவே சீரியலில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. காவ்யா முதன் முறையாக பரத் மற்றும் வாணி போஜன் நடித்த ‘மிரள்’ படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சினிமா வாய்ப்புகள் :

இதனை தொடர்ந்து கவின் நடிக்கும் ‘ஊர்குருவி’ படத்தில் காவ்யா நடிக்கிறார் என்ற தகவல் கடந்த ஆண்டு வெளியாகி இருந்தது.இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் படத்தில் கதாநாயகியாக காவ்யா ஒப்பந்தமாகி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இப்படி அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 40ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் 120,000 பேர் உள்ளே நுழைந்தால் இப்படி தான் ஆகும்.

கிளாமர் போட்டோ ஷூட் :

அதுமட்டும் இல்லாமல் காவ்யா வெப் சிரிஸிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் காவியா அடிக்கடி போட்டோ சூட்ளை நடத்துவது வழக்கம் அந்த வகையில் சமீப காலமாக இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் என்ன காவியா இதெல்லாம் சினிமாவிற்காக என்ன எல்லாம் செய்றீங்க என்று வருத்தப்பட்டு வருகிறார்கள்.

Advertisement