பாண்டியன் ஸ்டோர்ஸில் குமரன் மற்றும் சித்ராவிற்கு பிடித்த எபிஸோட்ஸ்கள் இது தானாம்.

0
8148
kathir
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியின் தற்போதைய சூப்பர் ஹிட் தொடராக இருப்பது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பும்,பாராட்டும் பெற்று வருகிறது. குடும்ப பந்தத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில் மூன்று ஜோடிகள் நடித்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்னவோ கதிர்-முல்லை ஜோடி தான். மேலும், இவர்கள் இருவரும் கூட இந்த சீரியலின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கமிட்டாகி அடுத்த சில மாதங்களிலேயே இவங்க ரெண்டு பேரும் ஜோடி நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடினார்கள். ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர்களுக்கு உள்ள என்ன நடந்துச்சுன்னு தெரியல ரெண்டு பேருமே எந்த நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொள்ளவில்லை. அதிலும் இவர்கள் இருவரில் இருந்து ஒருவர் சீரியலை விட்டு விலக போறாங்கள் என்று கூட இணையங்களில் வதந்தியை கிளப்பினார்கள். இப்படி சித்ரா,குமரன் இடையே நடந்த பிரச்சனையெல்லாம் வதந்தி, சீரியல் விளம்பரத்திற்காக செய்தது என்று கூறி இருந்தார்கள்.

இதையும் பாருங்க : என்னோட செல்லத்தம்பி இவன் தான் உங்க கிட்ட காட்டணும்னு தோணிச்சு – நிஷா பதிவிட்ட புகைப்படம்

- Advertisement -

ஆனால், சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் குமரன், அதில் சித்ராவுடன் இருப்பதை காண்பித்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அதே போல சித்ராவும் பேட்டி ஒன்றில் குமரனுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் குமரன் மற்றும் சித்ரா இருவரும் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்த எபிசோட் என்று கேள்வி கேட்கப்பட்டது.

வீடியோவில் 8 : 38 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அதற்கு முதலில் பதில் அளித்த சித்ரா, எனக்கு பைக் ஓட்டும் சீனும், பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் சீனும் பிடிக்கும் என்று கூறினார் பின்னர் பேசிய குமரன் எனக்கும் அந்த காட்சி பிடிக்கும் என்று சொன்னார். ஆனால், அந்த காட்சியில் நான் தான் நடிப்பேன்சித்ரா தூங்கி கொண்டு தான் இருப்பார் என்று சொன்னதும். நான் உண்மையாகவே அந்த காட்சியில் தூங்கி விட்டேன் என்று கூறியுள்ளார் சித்ரா.

Advertisement