வெக்கமே இல்லாமல் இப்படியா பண்றது – பாண்டியன் ஸ்டோர்ஸ் செட்டில் இருந்து குமரன் வெளியிட்ட வீடியோ.

0
734
kumaran
- Advertisement -

கதிர் குமரனின் லேட்டஸ்ட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியலில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், காவ்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் என இந்தியாவில் 8 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியலில் கதிர்- முல்லை இருவரும் சேர்ந்து ஹோட்டல் நடத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால், அதில் பெரிய அளவில் லாபம் கிடைக்காததால் அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா புதியதாக பியூட்டி பார்லர் ஒன்று நடத்தி வருகிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இன்னொரு பக்கம், மூர்த்தியின் அம்மா கனவில் வந்து வீட்டை மாற்றுங்கள் என்று சொல்கிறார். இதனால் வீட்டை விற்க்கும் முயற்சியில் மூர்த்தியின் குடும்பம் இருக்கிறது. இதை மீனாவின் அப்பாவே வாங்கி விடலாம் என்று திட்டம் போடுகிறார். மூர்த்தியின் குடும்பத்தில் இருப்பவர்கள் வீட்டை விற்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் நிலம் வாங்கி வீடு கட்டும் முயற்சியில் மும்முரமாக இருக்கிறார்கள்.

சீரியலின் கதை:

இது முல்லையின் அம்மாவிற்கு தெரிய வந்து முல்லை அம்மாவும், மல்லியும் தனமிடம் பயங்கரமாக சண்டை போடுகிறார்கள். இந்த விஷயம் கதிர் முல்லைக்கு தெரிய வருமா? கதிர் – முல்லை கூடிய விரைவில் புது வீட்டிற்கு செல்வார்களா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் செல்வது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் குமரனின் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

கதிர் குமரன் குறித்த தகவல்:

இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் குமரன் நடித்து வருகிறார். இதற்கு முன்பு சீரியல்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சிறந்த டான்ஸரும் ஆவார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். இந்நிலையில் நடிகர் குமரன் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

குமரன் பதிவிட்ட வீடியோ:

அதில் அவர், தன் ஹோட்டலுக்கு தம்பி கண்ணன் வந்து ஓசியில் சிக்கன் சாப்பிடுவது போன்ற வீடியோ தான். அந்த வீடியோவை பதிவிட்டு அவர், வெட்கமே இல்லாமல் அவன் ஏழு முழு சிக்கனையும் சாப்பிட்டு விட்டான். நீங்கள் யாரும் தப்பா நினைக்காதீங்க, ப்ளீஸ் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டிருக்கும் பதிவும் வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement