நேத்து வந்த ரஞ்சித்லாம் ஸ்டார் ஜோடிகள்ல இருக்காரு, பாண்டியன் ஸ்டோர்ஸ்ல இருந்து ஏன் ஒருத்தரும் வரல தெரியுமா ?

0
2098
pandianstores
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
https://www.instagram.com/stories/kumaran_thangarajan/2387757673673643353/?igshid=1x3lo6wmf2nkp

கொரோனா பிரச்சனையால் ஒரு சில சீரியல்களை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் சில தொலைக்காட்சிகள் நிறுத்தியது. இருப்பினும் புது புது சீரியல்கள், ரியாலிட்டி ஷாக்களை ஆரம்பித்து விட்டது சில சேனல். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார் ஜோடிகள் என்ற புதிய ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்று துவங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்களில் நடித்து வரும் ஜோடிகள் கலந்து கொண்டு இருக்கின்றனர். அவ்வளவு ஏன் விஜய் டிவிக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள ரஞ்சித் கூட ஜோடியுடன் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால், விஜய் தொலைக்கட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை.

அட, மீனா கர்ப்பமாக இருக்கிறார் அதனால் அவர் கலந்துகொள்ளவில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனால், ஸ்டாலின் – சுஜா ஜோடியோ, குமரன் -சித்ரா ஜோடியோ கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து ஏற்கனவே முல்லை விளக்கம் அளித்த நிலையில், தற்போது குமரனும் சுஜா சொன்ன காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இது தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Advertisement