தனது குழந்தை குறித்து தீயாக பரவும் வதந்திக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விளக்கம். இந்த கொடுமைய பாருங்க.

0
46713
hema
- Advertisement -

தனது குழந்தை குறித்து பரவிய வதந்திக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபத்திரத்தில் நடித்து வரும் ஹேமாவிற்கு குழந்தை பிறந்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மீனா என்கிற ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவில் அதிக ஆர்வம் உடையவர். ஹேமா எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் துறை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார்.பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் குலதெய்வம், மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான். சமீபத்தில் கூட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவிற்கு குழந்தை பிற்ந்தது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கர்ப்பமாக இருந்து வந்த மீனாவிற்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்ததது. இப்படி ஒரு நிலையில் நடிகை ஹேமாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருந்தது.

இப்படி ஒரு நிலையில் இரட்டைக் குழந்தை பிறந்திருப்பதாக யூடியூபில் செய்தி ஒன்று வெளியானது. அதுவும் மீனா கையில் இரட்டை குழந்தை இருப்பது போலவும் அந்த பக்கத்தில் புகைப்படமும் வெளியானது. இதனை குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்திருக்கும் நடிகை ஹேமா, ‘இது நல்ல புரளியா இருக்கே’ என்று கூறி அதை முழுவதுமாக மறுத்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement