சத்தமில்லாமல் முடிந்த சித்ராவின் திருமண நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை யார் தெரியுமா ?

0
56051
chitra

தற்போது தொலைக்காட்சி தொடர்களில் போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு புதுப்புது தொலைக்காட்சிகளை வெளியேறுவது விஜய் டிவிதான் அந்த வரிசையில் தற்போது விஜய் டிவியில் ட்ரெயின் டைம் சீரியலாக திகழ்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் இந்த தொடரில் பல்வேறு நபர்கள் நடித்தாலும் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் வரும் குமரன் மற்றும் சித்ரா தான் ரசிகர்களுக்கு ஃபேவரிட் ஜோடிகளாக வாழ்ந்துவருகிறார்கள் இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சித்ரா தொகுப்பாளினியாக இருந்து வந்தவர்.

நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.

- Advertisement -

சித்ராவிற்கு எப்போது திருமணம் என்று அவரது ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு திடீரென்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. சமீபத்தில் நடிகை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். வழக்கம் போல இது எதாவது போட்டோ ஷூட்டாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அது நிச்சயதார்த்தத்திற்கான மேக்கப் என்று தெரியவந்துள்ளது.

நேற்று (ஆகஸ்ட் 24) சென்னையில் உள்ள GPN பேலஸில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது. சித்ரா திருமணம் செய்து கொள்ளும் நபரின் பெயர் ஹேமந்த் ரவி. தனது திருமணம் குறித்து பேசியுள்ள சித்ரா, இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்துகொள்ள போவதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசிய சித்ரா, எனக்கு புரப்போசல்ஸ் வரவே மாடீங்கிதேனு வருத்தமா இருக்கு. நான் கண்டிப்பா காதல் திருமணம்தான் செய்வேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement