குட்டி நயன் அனிகாவை காப்பி அடித்து போட்டோ ஷூட் நடத்திய புதிய முல்லை – (இவங்களும் நயன்தாரானு நம்பிட்டு இருக்காங்களோ)

0
7584
kavya
- Advertisement -

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கதா இடத்தை பிடித்து விடுகிறார்கள். பேபி ஷாலினி துவங்கி மீனாவின் மகள் பேபி நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் சினிமாவில் பிரபலம் தான். அந்த வகையில் தமிழ் திரைப்படங்களில் மகத்தான வெற்றி கொடுத்த என்னைஅறிந்தால், விசுவாசம் ஆகிய படங்களில் தல அஜித்குமாருக்கு மகளாக நடித்த அனிகா சுரேந்தர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.

- Advertisement -

நடிகை அனிகா அவர்கள் 2010 ஆம் ஆண்டு வெளி வந்த கத திருடனும் என மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானர். தல அஜித் நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளி வந்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்தர். இவர் மலையாள மொழியில் பத்துக்கும் மேற்பட்ட படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். அதுவும் மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார் .

விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்த அனிகா தற்போது நயன் போலவே மாறி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து பலரும் இவரை மினி நயன்தாரா என்று புகழ, சமீப காலமாக இவர் நயனை போல தோற்றத்துடன் தான் போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் போலவே விஜய் டிவி சீரியல் நடிகை காவ்யாவும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

பாரதி கண்ணம்மா சீரியலில் கதாநாயகனின் தங்கையாக அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் நடிகை காவ்யா. தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் மறைந்த நடிகை சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் சமீபத்தில் நடத்திய போட்டோ ஷூட் ஒன்று அனிகா நடத்திய போட்டோ ஷூட் போலவே இருக்கிறது. இதை பார்த்த பலரும் உங்களுக்கும் நயன்தாரா நெனப்பு தானா என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement