பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகளின் முழு சம்பள விவரம் – அதிகம் வாங்குவது யார் தெரியுமா?

0
2861
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா, மூர்த்தியிடம் சண்டையிட்டு தன்னுடைய மாமனாரின் வீட்டிற்கு சென்று விடுகிறார். பிறகு ஐஸ்வர்யா, கண்ணனும் மூர்த்தியிடம் சண்டை பிறகு விட்டு வெளியே வந்து விடுகிறார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு பிறகு கண்ணன்-ஐஸ்வர்யா தங்களுடைய வீட்டிற்கே வந்து விடுகிறார்கள்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

அதோடு இவர்கள் வாங்கி வைத்த கடன் விவகாரம் யாருக்கும் தெரியாது. கண்ணன் வேலை செய்யும் இடத்தில் லஞ்சம் வாங்குகிறான். இன்னொரு பக்கம் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து விட்டது. கதிர்- முல்லை தங்கள் குழந்தையுடன் வீட்டிற்கு வந்து விடுகிறார்கள். பின் தனத்திற்கு நெஞ்சில் வலி ஏற்படுகிறது. இதனால் இவர் மருத்துவமனைக்கு செல்ல நினைக்கிறார். அப்போது தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிகிறது.

சீரியலின் கதை:

இதனால் தனம்-மீனா இருவரும் மனம் உடைந்து விடுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டாம் என்று தனம் மீனாவை தடுக்கிறார். மீனாவும் என்ன செய்வது? என்று புரியாமல் பரிதவித்திருக்கிறார். தன்னுடைய குடும்பத்தை எப்படியாவது ஒன்றிணைக்க வேண்டும் என்று போராடுகிறார் தனம். மீனா தனத்தை காப்பாற்ற நினைக்கிறார். இன்னொரு பக்கம் கண்ணன்- ஐஸ்வர்யா வாங்கிய கடன் குறித்து முல்லைக்கு தெரிய வருகிறது.

-விளம்பரம்-

இது குறித்து அவர் தனம் இடம் சொல்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் கண்ணனும் ஐஸ்வர்யாவும் அமைதியாக நிற்கிறார்கள். இனிவரும் நாட்களில் ஐஸ்வர்யா- கண்ணன் கடன் வாங்கிய விவகாரம் மூர்த்திக்கு தெரிய வருமா? கண்ணன் லஞ்சம் வாங்கியது குறித்து பிரச்சினை வெடிக்குமா? தனம் நிலைமை என்ன? என்ற பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

நடிகர்கள் வாங்கும் சம்பளம்:

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் நடிகைகள் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

தனம்- ரூ. 40 ஆயிரம்
மீனா- ரூ. 30 ஆயிரம்
ஜீவா- ரூ. 25 ஆயிரம்
கதிர்- ரூ. 30 ஆயிரம்
மூர்த்தி- ரூ. 35 ஆயிரம்
முல்லை- ரூ. 20 ஆயிரம்
ஜகா- ரூ. 15 ஆயிரம்

Advertisement