வேறு புதிய தொடருக்கு சென்ற நடிகர் – விரைவில் முடிவுக்கும் வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

0
983
pandian
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-
pandian

மேலும், இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது இந்த சீரியல் பல அதிரடித்திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, விஜய் டிவியில் தற்போது புத்தம் புதிதாக கிழக்கு வாசல் என்று தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

- Advertisement -

கிழக்கு வாசல் சீரியல்:

இதை ராதிகா சரத்குமாரின் ராடா நிறுவனம் தயாரிக்கிறது. மறைந்த நடிகர் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தின் கதை தான் இந்த சீரியல் என்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த சீரியலின் ஷூட்டிங் தொடக்க விழா நடந்தது. இந்த சீரியலில் விசு நடித்த கதாபாத்திரத்தில் இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் நடிக்க இருக்கிறார். இந்த சீரியலில் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சஞ்சீவ் அளித்த பேட்டி:

-விளம்பரம்-

இவருக்கு ஜோடியாக பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மா கமிட் ஆகியிருக்கிறார். இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் நடிகர் சஞ்சீவ் திடீர் என சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். மேலும், இந்த சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து சஞ்சீவ் கூறுகையில் ‘இந்த சீரியலின் பூஜையில் கலந்து கொண்டது உண்மை தான். ஷூட்டிங் தொடங்கி சில காட்சிகளில் நடிக்க செய்தேன்.

புது தொடரில் கமிட்டான ஜீவா:

ஆனால், இப்போது நான் இந்த சீரியலில் இல்லை. நீங்க இந்த சீரியலில் பண்ணவில்லை என்று என்னிடம் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதற்கான காரணத்தை நான் இப்போது மீடியா முன்பு விளக்கமாக பேச விரும்பவில்லை. சீக்கிரமாக அடுத்த ப்ராஜெக்ட் உடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து தற்போது சஞ்சீவிக்கு பதிலாக இந்த கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் வெங்கட் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

முடியப்போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

வெங்கட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், வெங்கட் புது தொடரில் நடிப்பது குறித்து வெங்கட்டுக்கு நெருங்கிய நண்பர்களிடம் விசாரித்த போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைவு பகுதிக்கு வந்து விட்டது. இந்த தொடர் ஜூன் மாதத்துடன் முடி இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த தொடர் முடிந்த பிறகு அதே நேரத்தில் கிழக்கு வாசல் தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக கூறுகிறார்கள். இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைய போகிறது என்று சொன்னவுடன் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement