சீரியல்ல தான் கட்டல, ஆனா, நிஜத்தில் பிரம்மாண்ட வீட்டை கட்டிய சுஜிதா. குவியும் வாழ்த்துக்கள்.

0
570
- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதா புதிதாக வீடு கட்டி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சின்னத்திரையில் முன்னணி சீரியல் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சுஜிதா தனுஷ். இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் என்னும் ஊரில் ஜூலை மாதம் 1983ல் பிறந்தார். சுஜித்தாவின் அப்பா பெயர் டி.எஸ். மணி மற்றும் அம்மா பெயர் ராதா. இவர் அண்ணனுடைய பெயர் சூரிய கிரன். இவர் சினிமா திரைப்பட இயக்குனர் ஆவார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்தும் இவர்கிறார். பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சி என்ற படத்தில் தான் சுஜிதா குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். பின் நடிகையாகவும் சுஜிதா பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

சுஜிதா குறித்த தகவல்:

பின் சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் இவர் சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் டிவியில் 30 சீரியலுக்கு மேல் நடித்து இருக்கிறார். தற்போது பிசியான சின்னத்திரை நடிகையாக சுஜிதா திகழ்கிறார். இப்படி நடிகை சுஜிதா அவர்கள் தனது சிறு வயதில் இருந்தே சின்னத்திரை, வெள்ளித்திரையில் நடித்து இருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் சுஜிதாவுக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது என்றே சொல்லலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சுஜிதா:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன், தம்பி பாச கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம்(அண்ணி) என்ற கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் சுஜிதா. இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் இந்த சீரியலை பல மொழியில் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

சுஜிதா குடும்பம்:

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் வீட்டை விட்டு ஜீவா, கண்ணன் இருவரும் சண்டை போட்டுவிட்டு வெளியேறி விட்டார்கள். கதிர், மூர்த்தி மட்டும் ஒன்றாக இருக்கிறார்கள். அடுத்து என்ன நடக்கும் என்ற பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது . இதனிடையே சுஜிதா, தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் விளம்பர படங்கள் எடுக்கும் இயக்குனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.

வைரலாகும் புகைப்படம்:

மேலும், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது புகைப்படம் வீடியோ மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் சுஜிதாவின் புகைப்படம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதாவது, சுஜிதா அவர்கள் தற்போது சென்னையில் புது வீடு ஒன்றை வாங்கி கட்டி இருக்கிறார். அந்த வீட்டினுடைய கிரகப்பிரவேச புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே சுஜிதாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement