ம க பா ஆனந்த் மற்றும் அவரின் மனைவியுடன் VJ சித்ரா. பலரும் பார்த்திராத புகைப்படம்

By Rajkumar · 5/3/2021

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எத்தனை ஜோடிகள் நடித்து வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி என்றால் கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக நடிகர் குமரனும், முல்லையாக நடிகை சித்ராவும் நடித்து வந்தனர்.

இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து முழுமையாக பல இல்லத்தரசிகளின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை சித்ரா.இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் அவரது கணவர் ஹேம்நாத், தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ரா இறந்து விட்டதால்,இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அவருக்கு பதில் முல்லை கதாபத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்று மிகப்பெரிய கேள்வி எழுந்தது.

இதையும் பாருங்க : டாப்ஸியிடம் இத்தனை கோடி கணக்கில் காட்டப்படாத பணம் - வருமான வரித்துறை தகவல்.

இப்படி ஒரு நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு பதிலாக, பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை காவ்யா புதிய முல்லையாக நடித்து வருகிறார். என்னதான் பாண்டியன் ஸ்டோர்ஸ்ஸில் புதிய முல்லையாக காவியா வந்தாலும் பழைய முறையான சித்ராவை ரசிகர்கள் இண்ணமும் மிஸ் செய்துதான் வருகிறார்கள்.

சித்ரா இறந்த போது பல்வேறு விஜய் டிவி பிரபலங்களும் கண்ணர் மல்க வீடியோ வெளியிட்டு தங்களது இரங்கலை தெரிவித்தனர். அந்த வகையில் ம க பா ஆனந்த் கூட கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகை சித்ரா, ம க பா ஆனந்தின் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

behindtalkies AMP · Quick view
View full