டாப்ஸியிடம் இத்தனை கோடி கணக்கில் காட்டப்படாத பணம் – வருமான வரித்துறை தகவல்.

0
708
taapsee
- Advertisement -

பாலிவுட் நடிகர்களான டாப்ஸி மற்றும் அனுரங் கஷ்யப் வீடு மற்றும் அலுவலங்கங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரமாக ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், பல விவசாய சங்கங்கள் கடந்த 100 நாட்களுக்கும் மேகலாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is anu.jpg

இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பாப் பாடகி ரிஹானா உட்பட சர்வதேச பிரபலங்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்தனர்.

இதையும் பாருங்க : வெறும் 600 ரூபாய்க்கு விஜய் ஆண்டனி பார்ட் டைமில் செய்துள்ள வேலை. எதற்காக தெரியுமா ?

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்திய பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் IndiaTogether, IndiaStandsAgainstpropaganda என்ற ஹாஷ்டேகில் இந்தியாவிற்கு ஆதரவாகவும் ரிஹானாவின் மற்றும் பிற சர்வதேச பிரபலங்களின் கருத்துக்கு எதிராகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நடிகர் அக்‌ஷய் குமார், கரண் ஜோஹர், சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு இருந்தனர். இப்படி ஒரு நிலையில் ந்தியாவிற்கு ஆதரவாக பல்வேறு பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் பதிவிட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக நடிகை டாப்ஸி தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை (03.03.21) நடிகை டாப்ஸியின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு இருந்தனர். இதே போல இயக்குநர் அனுராக் காஷ்யப், விகாஸ் பால் ஆகியோரின் வீடுகளிலும் வருமானத் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர். டாப்ஸி, அனுராக், விகாஸ் ஆகியோரது இடங்களையும் சேர்த்து மொத்தம் 22 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

-விளம்பரம்-

மத்திய அரசுக்கு எதிராக கருத்து கூறியதால் தான் டாப்ஸி வருமான வரி சோதனைக்கு ஆளாகி இருக்கிறார் என்று பலரும் கூறி வந்தனர். இப்படி ஒரு நிலையில் டாப்ஸியிடமிருந்து 5 கோடி ரூபாய் கணக்கில் கட்டப்படாத ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் அனுராக் வீட்டில் ரூ.20 கோடியும், தயாரிப்பு நிறுவனமான ஃபேன்டோம் நிறுவனத்தில் ரூ.350 கோடிக்கும் மேலான ஆவணங்களும் கிடைக்கப்பெற்றதாக வருமான வரித்துறை தகவல். தொடர்ந்து சோதனைகள் நடைபெறும் என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

Advertisement