தலையா? தளபதியா.! மனம் திறக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.!

0
1306
pandiyan stores
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல சீரியல் நடிகர் குமரன் விஜய் மற்றும் அஜித் குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

குமரன் பெரும் பிரபலமடைந்தது கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி பன் அன்லிமிடேட் ‘ என்ற நடன நிகழ்ச்சி மூலம் தான். இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசையும் தட்டி சென்றார் குமரன். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் குமரனும் ஜோடி நிகழ்ச்சியில் குமரனின் நடன இயக்குனராக பங்குபெற்ற மணி என்பவரும் தனியார் யூடுயூப் சேனளுக்கு பேட்டி அளித்தனர். அப்போது குமாரனிடம் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரில் யாருக்கு
யாருக்கு தம்பியாகவும், யாருக்கு வில்லனாகவும் நடிக்க விருப்பம் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த குமரன், தளபதிக்கு தம்பியாகவும், தல அஜித்திற்கு வில்லனாகவும் நடிப்பேன் என்றார். டப்ஸ் ஸ்மாஷ் செய்தால் கூட தளபதி பற்றிய விடியோவை தான் ட்ரை செய்வேன். அவரது அசைவுகளை கூர்மையாக கவனித்து அவரை போலவே செய்ய முயற்சிப்பேன். அதனை பலரும் பாராட்டியுள்ளனர். இதனால் விஜய்க்கு தம்பியாக நடித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றார்.

-விளம்பரம்-
Advertisement