நாட்டுப்புற பாடல்கள் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டிப்போட்டவர் பரவை முனியம்மா. சொல்லப்போனால் இவருடைய நாட்டுப்புறப் பாடலுக்கு பல பேர் அடிமை. இவர் இந்தியாவில் மட்டுமல்லாமல் லண்டன், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று நாட்டுப்புற கலையை மேம்படுத்தி உள்ளார். இவர் நாட்டுப்புற பாடகியாக மட்டும் இல்லாமல் நடிகையாகவும் திகழ்ந்து விளங்கியவர். இவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பரவை என்னும் ஊரை சேர்ந்தவர். அதனால் தான் இவரை ‘பரவை முனியம்மா’ என்று அழைக்கிறார்கள்.

Advertisement

இவர் தமிழ் சினிமா உலகிற்கு விக்ரம் நடிப்பில் வெளிவந்த “தூள்” எனும் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்நிலையில் பரவை முனியம்மா அவர்களை பற்றி தெரியாத சில விஷயங்கள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. இவருக்கு 16 வயதில் திருமணமாகி ஆறு பிள்ளைகள் இருக்கின்றனர். இவரது கணவர் இறந்து விட்டார். பரவைமுனியம்மாவுக்கு கடைசியாக மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகன் ஒருவர் மட்டும் தான் இருக்கிறார்.

இதையும் பாருங்க : இயக்கம்,நடிப்பை அடுத்து சேரனின் அடுத்த அவதாரம். சேனல் பேர் இது தானாம்.

பாட்டு, சினிமா நடிப்பு என்பதன் மூலம் சம்பாதித்த பணத்தை தான் இத்தனை காலமாக தன்னுடை மகனை பார்த்து வந்தார். இவர் சினிமாவில் பாடுவதற்கு முன்னாடி நாட்டுப்புறப் பாடல்களை மதுரையில் பாடி பட்டையை கிளப்பியவர். கச்சேரிகள், ஊர் திருவிழா என அனைத்தும் இவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். 20 வருடங்களுக்கு மேலாக இவர் நாட்டுப்புற பாடல்கள் பாடியுள்ளார். அதற்குப் பிறகு தான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

இவர் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தூள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் அறிமுகமாக இருந்தது. அது சூப்பர் ஸ்டார் நடித்த முத்து படத்தில் ‘கொக்கு சைவ கொக்கு’ என்ற பாடலுக்கு பாட இவர் தான் முதலில் அழைத்தார்கள். ஆனால், இந்த தகவல் முனியம்மா அவர்களை சேர்வதற்கு முன்பாகவே பாட்டியின் உடனிருப்பவர்கள் முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

இதையும் பாருங்க : சமுத்திரக்கனி, சமுத்திரகாய், சமுத்திரதேனீ. வச்சு செய்யும் மீம் கிரியேட்டர். காரணம் இதுவா ?

Advertisement

அப்போது அந்த செய்தி பத்திரிகையில் “ரஹ்மானுக்கு நோ சொன்ன பாடகி” என்று பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு தான் முனியம்மாவுக்கு தெரிய வந்தது. பரவை முனியம்மா எத்தனை வெளிநாடுகளுக்கு போய் பாடினாலும் எப்போதுமே முகத்தில் பவுடர் போட மாட்டார். வெறும் மஞ்சள் பூசுவதை மட்டுமே அவர் வழக்கமாக வைத்திருந்தார். மேலும், இவர் பல வானொலிகளில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

பரவை முனியம்மா அவர்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் கையால் கலைமாமணி விருது உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். தூள் படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகை ஜோதிகாவும், பரவை முனியம்மாவும் தான் ரொம்ப க்ளோஸ். நண்பர்கள் போல் அவர்கள் பேசி மகிழ்ந்தார்கள். பரவை முனியம்மா வங்கி கணக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எம்ஜிஆர் அறக்கட்டளை மூலம் 6 லட்ச ரூபாய் பணம் போட்டிருக்கிறார். அதிலிருந்து வரும் வட்டியை வைத்து தான் இத்தனை காலம் மருத்துவம் மற்றும் குடும்ப செலவுகளை பரவை முனியம்மா பார்த்து வந்திருக்கிறார்.

இவர் காதல் சடுகுடு, பூ, தேவதையை கண்டேன் என 25 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும், இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராமத்து சமையல் நிகழ்ச்சியை கூட தொகுத்து வழங்கியுள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்த தருணத்தில் பரவை முனியம்மாவுக்கு வயது முதிர்வால் உடல்நலகுறைவு ஏற்பட்டது. சமீபத்தில் தான் இவர் உடல் நலம் இன்றி காலமானார். இவர் இறப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. இவர் இவ்வுலகை விட்டு நீங்கினாலும் இவரின் பாடல்கள் மக்கள் மனதில் நீங்காமல் உள்ளது.

Advertisement